கோகிலம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'கோகிலம்' இலங்கை, கிழக்கு மாகாணத்தின், கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து வெளிவந்த காலாண்டுச் சஞ்சிகை. மொத்தம் ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் படைப்பிலக்கியத் துறையில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிற்றிதழாகக் குறிப்பிடலாம்.

வெளிவந்த இதழ்கள்[தொகு]

முதலாவது இதழ் 1983 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலும், இறுதி இதழ் (ஆறாவது இதழ்) 1984 செப்டம்பர் மாதத்திலும் வெளிவந்தது.

நிர்வாகம்[தொகு]

பிரதம ஆசிரியர்: எம்ஸியேபரீத். துணை ஆசிரியர்: தம்பிலுவிலைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி சபாரெத்தினம் (தம்பிலுவில் ஜெகா) இச்சஞ்சிகை கல்முனை சாய்ந்தமருது எனும் முகவரியைக் கொண்டிருந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இலக்கிய கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நூல்நயம், வாசகர் பக்கம், கேள்வி பதில், சமயம், கலாசாரம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கோகிலம் தனது 3வது இதழுடன் உருவ அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தன்னை விரிவாக்கிக் கொண்டது. கோகிலம் 5ல், இதயராகம் பேட்டி, ஆங்கிலம் கற்போமா? போன்ற அம்சங்கள் உள்ளடங்கின.

இதில் எழுதியோர்[தொகு]

மா.சந்திரலேகா, மசுறா ஏ. மஜீட், மருதூரான், எஸ். எம். எம். ராபிக், இப்னு அஸமத், அன்பிதயன் சிராஜ், பாரதிபுரம் வி.நடனசேகரம், ராதிகா குமாரசாமி, பரந்தன் செவ்வந்தி, மகாலிங்கம், பாண்டிருப்பு நாகராஜா, சாய்ந்தமருது ஆர். எம். நௌஸாத், மூதூர் சிராஜ், பரந்தன், கலைப் புஸ்பா, ஈழதாசன், காரைதீவு வீ. சிவபாலன், கலீல், சோலைக்கிளி, ப. ஜெகதீசன், ஒலுவில் அமுதன், கின்னியா அமீர் அலி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிலம்_(சிற்றிதழ்)&oldid=2452156" இலிருந்து மீள்விக்கப்பட்டது