கொலம்பினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமார் 1683இல் கொலம்பினா பற்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டு சித்தரிப்பு.

கொலம்பினா ( Columbina )[1] (அதாவது சிறிய புறா ) என்பது 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா முழுவதும் பிரபலமாக இருந்த இத்தாலிய தொழில்முறை நாடகத்தில் தோன்றிய நகைச்சுவை பெண் பாத்திரமாகும்.[2]இவர் இத்தாலிய நகைச்சுவை பாத்திரமான ஆர்லெக்வினின் எஜமானியாகவும்,[2] தந்திரமான அடிமையான நகைச்சுவைப் பணியாளர் மற்றும் பியர்ரோட்டின் மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். ஜான் ருட்லின் மற்றும் ஆலிவர் கிரிக் ஆகிய எழுத்தாளர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய நாடகக் குழுக்களுக்கான காமெடியா டெல்'ஆர்டே: த ஹேண்ட்புக் ஃபார் டுரூப்ஸ் என்ற நூலில் கொலம்பினா என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர்.[3]

வரலாறு[தொகு]

பெண் வேலைக்காரியின் பாத்திரம் முதலில் ஒரு நடனக் கலைஞராகவேச் சித்தரிக்கப்படிருந்தது.[4] மேடையில் நிகழ்த்தப்படும் கதையில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு இடையில் நடனமாட அனுமதிக்கப்பட்டனர். இறுதியில், இந்த பெண்கள் மேடையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கதாபாத்திரங்களின் புரளி மற்றும் கிசுகிசு வேலைக்காரர்கள் ஆனார்கள். பின்னர், பின்னர், சானி என்ற முட்டாள்தனமான கதாபாத்திரங்களுக்கு இணையானவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.[4][5][6] கொலம்பைன் மிகவும் கீழ்நிலையில் இருந்ததால் அது உண்மையில் என்னவாக இருந்தது என்பதை எப்போதும் பார்க்க முடிந்தது. அவள் சில சமயங்களில் விபச்சாரியாகவும் சித்தரிக்கப்படுகிறாள். இவள் யாரிடமோ அல்லது யாரைப் பற்றியோ எதுவும் சொல்லாமல் மிகவும் அரிதாகவே இருந்தாள். [7]

இவர், நிகழ்ச்சிகளில் பொருத்தமான, மிகவும் குட்டையான கந்தலான மற்றும் ஒட்டுப்போட்ட ஆடையை அணிந்து வருவார். இந்த பாத்திரங்கள் பொதுவாக முகமூடி இல்லாமல் நடித்தன.[6] இவளது கண்களைச் சுற்றியும் கனமான ஒப்பனை செய்யப்பட்டிருக்கும்.[8][9][10]

கொலம்பைன் என்பது பெண் வேலைக்காரி பாத்திரத்தின் தொன்மத்துடன் தொடர்புடைய ஒரு பெயராக இருந்தாலும்,[6][11] காமெடியா டெல்'ஆர்டே நிகழ்ச்சிகளில் அதே பாத்திரம் நடித்த மற்ற பெயர்களில் பிரான்ஸ்சினா, இசுமரால்டினா, ஒலிவா, நெஸ்போலா, எசுபினெட்டா ரிச்சியோலினா மற்றும் கொரலினா டயமண்டினா ஆகியவையும் அடங்கும். [4] [7] [12] கொலம்பினா என்பது சோப்ரெட்டா பாத்திரத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பெயராகும். குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் கொலம்பைன் எனப்படுகிறது.[13]

சில்வியா ரோன்காக்லி என்ற நடிகை இந்த கதாபாத்திரத்தை பிரபலமாக்கியவர்களில் ஒருவர். இவர் 1570 ஆம் ஆண்டில் பிரான்செசினா என்ற பெயரில் ஒரு செரெட்டா பாத்திரத்தை செய்த முதல் பெண்மணியாகக் கருதப்படுகிறார்.[6] இத்தாலிய நடிகை இசபெல்லா பிராஞ்சினி பியான்கோலெல்லி என்பவர் கொலம்பினா என்ற பாத்திரத்தில் நடித்த முதல் பெண்களில் ஒருவர் . [14] இவரது பேத்தி, கேதரினா பியான்கோலெல்லி, கொலம்பினா என்ற பெயர் கொண்ட செரெட்டாக்களில் மிகவும் பிரபலமானவர். இவர் 1683 களில் நடித்தார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Colombina". Enciclopedia Treccani (in இத்தாலியன்).
  2. 2.0 2.1 Coulson, J.; Carr, C. T.; Hutchinson, Lucy; Eagle, Dorothy; Hawkins, Joyce (1976). The Oxford Illustrated Dictionary (Second ). Great Britain: Book Club Associates. பக். 167. "Columbine, Character in Italian comedy, the mistress of Harlequin (Arlecchino)" 
  3. Rudlin, John; Crick, Oliver (2001). Commedia dell'arte: A Handbook for Troupes. Routledge. பக். xiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-20409-5. https://books.google.com/books?id=CgMKhwelZzUC&q=%22columbina%20never%20existed%22. "... certainly not 'Columbina'—who never existed anywhere." 
  4. 4.0 4.1 4.2 Grantham 2000.
  5. Rudlin 1994, ப. 127: Although Colombina became the dominant name, especially as Colombine in France and England, she had originally been called Franceschina, Smeraldina, Oliva, Nespola, Spinetta, Bobilina, Ricciolina, Corallina, Diamantina, Lisette, etc..
  6. 6.0 6.1 6.2 6.3 Oreglia 1968, ப. 123.
  7. 7.0 7.1 Smith 1964, ப. 8.
  8. Rudlin 1994, p. 129: Unmasked, but the eyes wide and well made-up. Can wear a domino for special excursions..
  9. Moland 1867, ப. 168–169.
  10. Smith 1964, ப. 202: Gheralid's Colombina must needs keep her audience awake by tormenting Arlequin with her ass in a constant changing personality, now as a doctor, now as a lawyer or peddler..
  11. Rudlin 1994, p. 128-129: The only lucid, rational person in commedia dell'arte, analogous to Maria in Twelfth Night..
  12. Oreglia 1968, ப. 122.
  13. Rudlin 1994, ப. 127.
  14. Radulescu, Domnica (2008). "Caterina's Colombina: The Birth of a Female Trickster in Seventeenth-Century France". Theatre Journal 60 (1): 87–113. doi:10.1353/tj.2008.0059. https://archive.org/details/sim_theatre-journal_2008-03_60_1/page/87. 
  15. Rudlin 1994, ப. 128–129.

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலம்பினா&oldid=3896319" இலிருந்து மீள்விக்கப்பட்டது