கொரியப் புவிப்பரப்பியல்
கொரியா வடகிழக்காசியாவில் கொரியத் தீவகத்தில் அமைந்துள்ளது. இதன் வடமேற்கே உள்ள அம்நோக் ஆறு/யாலூ ஆறு கொரியாவைச் சீனாவில் இருந்து பிரிக்கிறது. வடகிழக்கே உள்ள தூமன் ஆறு/தூமென் ஆறு கொரியாவைச் சீனாவில் இருந்தும் உருசியாவில் இருந்தும் பிரிக்கிறது. கொரியாவுக்கு மேற்கே மஞ்சள் ஆறும் கிழக்கே கிழக்குச் சீனக்கடலும் கொரிய நீர்ச்சந்தியும் யப்பானியக் கடலும் (கிழக்குக் கடலும்) உள்ளன.[1] கொரியாவின் குறிப்பிட்த் தகுந்த தீவுகளாவன: யேயூ தீவு (யேயுதோ), உல்லேயங் தீவு (உல்லேயங்தோ), இலியான்கோர்ட் பாறைகள் (தோக்தோ).
கொரியாவின் தெற்கிலும் மேற்கிலும் வளமான மேட்டுச் சமவெளிகளும் வடக்கிலும் கிழக்கிலும் மலைகளும் அமைந்துள்ளன.கொரியாவின் மிக உயரமான மலை பயேக் மலை அல்லது பயேக்துசான் (2,744;மீ) ஆகும்.இது சீனஎல்லையாக உள்ளது. பயேக்து மலையின் தெற்கு நீட்சியாக கயேமா சமவெளி அமைகிறது. இது புத்துயிரிக் கால மலைத்தோற்றத்திபோது தோன்ரியதாகும். இது பகுதி-எரிமலை உமிழ்வுப்பொருளைக் கொண்டுள்ளது . தீவகக் கிழக்குக் கடற்கரையில் கயேமா கோவானுக்குத் தெற்கில் நீண்ட மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலைத் தொடர் பயேக்துதேகான் எனப்படுகிறது.சில குறிப்பிட்த் தகுந்த மலைகளாவன: சொபேக் மலைஅல்லது சொபேக்சான் (1,439 மீ), கும்காங் மலை அல்லது கும்காங்சான் (1,638மீ), செயோரக் மலை அல்லது செயோரக்சான் (1,708மீ), தேபேக் மலை அல்லது தேபேக்சான் (1,567மீ), and இரி மலை அல்லது யிரிசான் (1,915 மீ). உயரம் குறைந்த அடுத்தநிலை மலைகள் பயேக்துதேகனுக்குச் செங்குத்தாக அமைந்துள்ளன. இடையுயிர்க் கால மலைத் தோற்ற வரிசையில் தோன்றிய இவை வடகிழக்கு வாக்கில் அமைந்துள்ளன.
கொரியாவின் தீவக மலைகளைப் போலல்லாமல், முதன்மையான கொரியத் தீவுகள் புத்துயிரிக் கால மலைத்தோற்றத்தின்போது எரிமலைச் செயல்பாடுகளால் தோன்றியவையாகும். தெர்குக் க்டலுக்கு ச் சேய்மையில் உள்ள யேயூ தீவு ஓர் எரிமலைத் தீவாகும். இது உருவாகக் காரணமான அல்லாசான் எனும் அல்லாமலை தென்கொரியாவிலேயே மிக உயரமான 1950 மீ உயரமுள்ள மலையாகும். யப்ப்ன் கடலில் உள்ள உல்லேயுங் தீவும் ஓர் எரிமலைத் தீவாகும். இது வேதி உட்கூற்றில் யேயூவை விட கூடுதலான அனற்பாறைத் தன்மையைக் கொண்டதாகும். மேற்கே செல்லச்செல்ல உள்ள எரிமலைத் தீவுகள் இளமையானதக அமைகிறது.
மலைகள் கொரியாவின் கிழக்குப் பகுதியில் அமைவதால் முதன்மை ஆறுகள் கிழக்கில் இருந்து மேற்கே ஓடுகின்றன. இதற்கு விதிவிலக்கு தெற்கே ஓடும் நாக்டோங்காங், சியோமியிகாங் ஆகிய இரண்டு ஆறுகளாகும்.மேர்கே பாயும் ஆறுகளாவன: அம்னோக் ஆறு, சோங்சோன் ஆறு(Chongchongang), தேடோங் ஆறு (Taedonggang), ஆன் ஆறு (Hangang), கியூம் ஆறு (Geumgang), யியோங்சான் ஆறு (Yeongsangang). இவை ஏராளமான வெள்ள வடிநிலங்களைக் கொண்டுள்ளன. இந்நிலங்கள் நஞ்சை நெல் பயிரிட ஏற்ற வளமுள்ளவையாக அமைகின்றன.
கொரியாவின் தெற்கு, தென்மேற்குக் கடற்கரைகள் தாடோகே-யின் எனக் கொரிய மொழியில் அழைக்கப்படும் அமிழ்நிலை ஆற்றுக் கணவாய்களாக உள்ளன. இந்த மடிப்புடைய கடற்கரை அமைதியான நீர்ப்பரப்பைக் கொண்டுள்ளன. இது கலமோட்டவும் மீன்பிடிக்கவும் கடற்களையைப் பயிரிடவும் ஏற்ற சூழலை வழங்குகிறது. சிக்கலானதாக அமைவதோடு கொரியத் தீவக மேற்குக் கடற்கரை நடுப்பகுதி இஞ்சியோன் அருகே உயர் ஓதநிகழ்வுடையதாகவும் அமைகிறது.இந்த உயரோதங்கள் 98 மீ வரை ஏற்படுகின்றன. எனவே மேற்கு, தெற்குக் கடற்கரைகளில் பரந்த ஓதச் சமவெளிகள் உருவாகியுள்ளன.
புவிப்புறவடிவ அமைப்பு
[தொகு]கொரியாவின் 70 விழுக்காடு பகுதி மலைகளேயாகும். சமவெளிகள் சிறியவை. அவை மலைத்தொடர்களுக்கு இடையில் அமைகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தீவகம் கூடுதலாக மலைகளால் நிரம்பி உள்ளது. இதில் 2744 மீ உயரங்கொண்ட மிகவும் உயரமான பயேக்து மலை வடக்கில் உள்ளது.
தீவகம் 8460 மீ நீலக் கடற்கரையைக் கொண்டுள்ளது, குறிப்பாக, தெற்கு, மேற்குக் கடற்கரைகள் மிகவும் ஒழுங்கற்றவை. இதன் 3,579 தீவுகள் பெரும்பாலும் தெற்கு, மேற்குக் கடற்கரைகளிலேயே அமைகின்றன.
காலநிலை
[தொகு]கொரியாவின் காலநிலை வடக்கிலும் தெற்கிலும் பெரிதும் வேறுபடுகிறது. தெற்குப் பகுதியில் யப்பானைப் போல வெதுவெதுப்பான ஈரப்பதக் காலநிலை நிலவுகிறது. மேலும் இப்பகுதி கிழக்குக் கொரிய வெந்நீரோட்டங்களால் தாக்கப்ப்டுகிறது. வடக்குப் பகுதியில் மஞ்சூரியாவைப் போல, குளிர்ந்த உள்நாட்டுக் காலநிலை நிலவுகிறது. எடுத்துகாட்டாக, யாலு ஆற்றுக் கணவாயில் 600 மி.மீ மழையும் தெற்குக் கடற்கரையில் 1500 மி.மீ மழையும் பொழிகிறது.[2]
தீவகம் முழுவதும் ஒத்த பொதுக் காலநிலையால் தாக்கமுறுகிறது. கோடை நடுவில் கிழக்காசியப் பருவ மழையும் இலையுதிர்க் காலத்தில் அடிக்கடி கடுஞ்சூறாவளிகளும் ஏற்படுகின்றன. பெரும்பாலான மழையும் கோடை மாதங்களில் பொழிகிறது; இதில் பாதி பருவக் காற்று மழையாகும். குளிர்ச்சி மிகுந்த குளிர்காலத்தில் மழைப்பொழிவு மிகவும் குறைவாகவே அமைகிறது. யேயூ தீவில் ஜனவரி வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே குறைகிறது . மலைப்பகுதிகளில் சிறிதளவு பனிப்பொழிவு காணப்படுகிறது.
உயிரியல்
[தொகு]கொரியாவில் 3,000 அளவுக்கும் மேலான தாவர இனங்கள் இன்ங்காணப்பட்டுள்ளன. இவற்றில் 500 இனங்கள் அகச் சூழலின. தீவகத் தாவரப்பகுதிகள் வெம்மிதவெப்ப, மிதவெப்ப, குளிர்மிதவெப்பக் காலநிலை வட்டாரத் தன்மை கொண்டுள்ளன. வெம்மிதவெப்பநிலை வட்டாரம் யேயூ தீவு உட்பட்ட தெற்குக் கடற்கரையிலும் தீவுகளிலும் அமைகிறது. இவ்வட்டாரத்தில் அகன்ற இலை தொடர்பசுமைக் காடுகள் உள்ளன.
உயர்மலைகளுக்கும் தெற்குக் கடற்கரைக்கும் தொலைவாக உள்ள பெருபாலான தீவகம் முழுவதும் மிதவெப்பநிலை அமைகிறது. இங்கு கொரிய ஊசியிலை மரங்களும் அகன்ற இலையுள்ள இலையுதிர் மரங்களும் அமைகின்றன. தீவக வட எல்லையிலும் யேயூவில் உள்ள அல்லாசான் உட்பட்ட உயர்மலைகளிலும் குளிர்மித வெப்பநிலை அமைகிறது. இலார்ச் யூனிபர் ஆகிய தொடர்பசுமை மரங்கள் மஞ்சூரியாவைப் போலவே இப்பகுதிகளில் அமைகின்றன.
புவியியல்
[தொகு]கொரியாவின் தரையமைப்பு மடிப்புகள் மிக்கது. சிறுசிறு மலைகளால் ஆயது. இவற்றின் பெரும்பாலான பாறைகள் முன்கேம்பிரிய வகையினதாகும். என்றாலும் சில பகுதிகளில் தொல்லுயிரிக் கால, இடையுயுரிக் கால, புத்துயிரிக்காலப் பாறைகளும் காணப்படுகின்றன.
தீவகத்தின் உள்ளே முனைப்பான எரிமலைகளேதும் இல்லை. என்றாலும், வடக்கில் அமைந்த பயேக்துசான் மலையும் தெற்கில் உள்ள அல்லாசான் மலையும் எரிமலை வாய் ஏரிகளைக் கொண்டுள்ளன. இவை நெடுங்காலத்துக்கு முன் முனைப்போடியங்கிய எரிமலைகள் இருந்த்தைச் சுட்டுகின்றன. மேலும் தீவகத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகள், பரவலான தாழ்நிலை எரிமலைச் செயல்பாடுகள் தீவகமெங்கும் பரவியுள்ளதைக் காட்டுகின்றன. கொரியாவில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு நிலநடுக்கங்கள் சராசரியாக ஏற்படுகின்றன. இவை பெருந்தாக்கம் ஏதும் விளைவிப்பதில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Korean Map பரணிடப்பட்டது 2013-07-23 at the வந்தவழி இயந்திரம், The People's Korea, 1998.
- ↑ KOIS 2003, p. 17.