கொரியப் புத்தாண்டு
Appearance
கொரியப் புத்தாண்டு கொரிய சந்திர நாட்காட்டியின் முதல் நாள். அது கொரியர்களின் மிக முக்கியமான பாரம்பரிய விடுமுறையாகும். கொண்டாட்டமானது கொரிய புத்தாண்டு நாளின் முனை நாள், கொரிய புத்தாண்டு நாள், கொரியப் புத்தாண்டு நாளுக்கு அடுத்த நாள் என மூன்று நாட்கள் நீடிக்கும்.
கொரியப் புத்தாண்டு பொதுவாக திசம்பர் கதிர்த்திருப்பம் நடந்து இரண்டாவது அமாவாசை நாளில் கொண்டாடப்படும். மிக அரிதான இடைச் செருகப்பட்ட மாதம் இருந்தால் புத்தாண்டு திசம்பர் கதிர்த்திருப்பம் நடந்து மூன்றாவது அமாவாசை நாளில் கொண்டாடப்படும். 2033 ஆம் ஆண்டு இவ்வாறான அடுத்த நிகழ்வு இருக்கும்.