கொரியக் கவிதை
கொரியக் கவிதை (Korean poetry) என்பது கொரிய மொழியில் எழுதப்பட்ட அல்லது கொரியர்களால் எழுதப்பட்ட கவிதையைக் குறிக்கும்.மரபுக் கொரியக் கவிதைகள் நிகழ்த்து கலையில் அவ்வப்போது பாடப்படும் பாட்டுகளாகவே அமைந்தன.பெரும்பாலும் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன் கொரியக் கவிதைகள் அஞ்சா எழுத்தில் எழுதப்பட்டன. பிறகு இவை ஃஆங்குல் எழுத்தில் எழுதப்பட்டன.
வரலாறு
[தொகு]பழங்காலக் கொரிய மக்களின் சமய வாழ்வில் வாய்மொழிப் பாடல்கள் நிலவியநிலை சீனப் பேரரசுகளின் வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அரசு மன்றங்களில்முதன்மை சடங்காளர் அரசுத் தோற்றத் தொன்மாக அரசரின் தெய்வீக மரபுத் தோற்றத்தைப் போரிலும் அமைதியான வாழ்க்கைக் காலத்திலும் ஓதுவதுண்டு. அப்படி ஓதும் எடுத்துரைப்பு நோரே (norae) எனப்பபடும் முதனிலைப் பாடல்கள் (norae) வரவேற்கப் பட்டதோடு மட்டுமல்லாமல் மகிழ்வூட்டவும் கடவுள்களுக்கும் ஆவிகளுக்கும் சாற்றவும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பழங்காலக் கொரியப் பாடல்களில் வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடைப்படைக் கூறுகளாக விளங்கின.[1]
மஞ்சட் பறவையின் பாடல்கள் (Song of Yellow Birds) (ஃஉவாங்யோகா, 황조가/黃鳥歌) எனும் பாடல்கள் 17 ஆம் நூற்றாண்டு கொகுரியியோ அரசர் யூரி காலத்தில் நிலவியதை எடுத்துகாட்டாகக் கூறலாம். சில பிற்காலக் கொரியக் கவிதை, சீனக் கவிதை வடிவமான ழ்சீ காதல் பாடல்களின் வடிவத்தைப் பின்பற்றியது. குறிப்பிடத் தகுந்த கொரியக் கவிதை மரபு 935 இல் கோரியியோ காலத்தில் தோற்றங் கண்டது. இத்திரட்டுகள் அருகலாகவே அச்சிடப்பட்டுள்ளன.
சீயோ எனும் மதிப்புமிக்க கொரியக் கவிதை இனம், அடிக்கடி 11 ஆம் நூற்றாண்டiச் சேர்ந்த சீயோன்பீ புலமையாளர்களோடு இனங்காணப் படுகிறது. என்றாலும் இவற்றின் வேர்கள் பழங்கொரியக் கவிதை வடிவங்களில் ஊன்றியுள்ளது.இப்போது கிடைக்கும் மிகப்பழைய சீயோக் கவிதைகள் 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இக்கவிதையினம் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய யோசியோன் பேர்ரசில் பரவலாகப் பின்பற்றப்பட்டது.
ஃ அயாங்கா (Hyangga)
[தொகு]இது ஃஅஞ்சா எழுத்தில் எழுதப்பட்ட மக்கள்வடிவக் கவிதையாகும்.இது ஒன்றிணைந்த சில்ல காலத்தில் தோன்றிய வடிவமாகும். இதன் ஃஅஞ்சா எழுத்துருக்கள் இடு எழுத்துகளைன் வடிவ அமைதியைக் கொண்டுள்ளது. இதன் தன்மை அல்லது பான்மை ஃஅயாங்சால் (hyangch'al) எனப்படுகிறது. இதுதனித் தனித்தன்மை வாய்ந்த முதல் கொரியக் கவிதை இனமாகும். கொரியியோ காலச் சாம்குக் யோசா (Samguk Yusa)எனப்படும் 14 கவிதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இது சாம்குக் யூசா (Samguk Yusa)) இயற்றிய இலியோனால் சாம்தேமொக் (Samdaemok) (삼대목/三代目) எனப்படும் தொகுப்பில் இருந்து தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சாம்தேமோக், சாம்குக் சாகியின் Samguk Sagi) கூற்றுப்படி, 888இல் சில்லா காலாத்தில் தொகுக்கப்பட்ட நூலாகும். இது இன்று கிடைக்கவில்லை. மறைந்த தொகுப்பு தோராயமாக, 1000 ஃஅயங்கா கவிதைகளால் ஆகியதாகும். இதேவகை பின்னாளைய 11 கோரியியோ பேரரசு காலக் கியூன்யியோயேயோன் (균여전/均如傳) கவிதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஃஅயாங்கா யாப்பியல் விதிகளைக் கொண்ட்தாகும். இவை நான்கு அல்லது எட்டு அல்லது 16 வரிகளில் இயற்றப்படுகின்றன. பதுவரிக் கவிதைகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டு மூன்று பகுதியாகப் பிரிக்கப்படுகின்றன. இப்ப்குதிகள் முறையே நான்கு, நான்கு, இரண்டு வரிகளில் அமையும்.பல பத்து வ்ரிக் கவிதைகள் புத்த்த் துறவி (பிக்கு)களால் இயற்றப்பட்டவையாகும். வளமாக இன்று விளங்கும் ஃஅயங்காக் கவிதை உருவாக்கத்தில் ழ்சில்லா ஃஉவராங்கின் பாத்திரம் பெரிது ஆயப்படும் புலமைக் கருப்பொருளாக விளங்குகிறது.
கோரியியோ பாடல்கள்
[தொகு]கோரியியோ காலத்தில்ஃஅஞ்சா எழ்த்துப் பயன்பாடு மிகுந்தது. ஃஅயாங்கா கொரிய இலக்கிய வடிவமாக மறைந்தது. "கொரியியோ பாடல்கள் (Goryeo songs)" (கொரியியோ கயோ) மக்களிடம் வலுவுற்றன.பெரும்பாலான கோரியியோ பாடல்கள் யோசியோன் பேர்ரசு காலம் வரை நிலவின. அப்போது ஃஆங்குல் எழுத்துகளில் எழுதப்பட்டன.
கோரியியோ கவிதை வடிவம் பையியோல்கோக் (byeolgok) எனப்பட்டது. இதில் இருவடிவங்கள் தெளிவாகப் பிரிக்கப்படுகின்றன:இவை தால்யியொன்சே (dallyeonche) (단련체) யியோன்யான்சே (yeonjanche) (연잔체) என்பன. முன்னது குறும்பா வடிவம்; பின்னது விரிநிலை வடிவம். இவை தெளிவான வடிவமற்றவை;இவை நீலமான வரிகொண்டவை. ஆனால் இவை தன்மையில் நேரட்த் தொர்பாடல் உள்ளவை; பொது வாழ்க்கைக் கூறுபாடுகளைக் கொண்டவை.
சீயோ
[தொகு]யோசியோன் காலத்தில் சீயோ எனும் மூன்றுவரிக் கவிதை மக்களிடம் பரவலானது. இது 18 ஆம் நூற்றாண்டில் உச்சத்தை எட்டியது. இது முன்பு குறும்பா எனப்பட்ட "தான்-கா " வடிவத்தின் புத்தியற் காலப் பெயராகும்.
சீயோ இயற்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் செம்மையான கட்டமைப்பு வாய்ந்த கவிதையாகும்.இருப்பியல் (மெய்யியல்), வானியல் விவரிப்புகளில் இது ஈடுபடுவதுண்டு. இதன் வரிகள் நிரலாக 14-16 அசைகளும் மொத்தமாக 44-46 அசைகளும் கொண்டவை. ஒவ்வொரு வரியின் நடுவிலும் ஓர் இடைவெளி விடப்படும். ஆங்கிலத்தில் மூன்ற் வரிகளுக்குப் பதிலாக ஆறு வரிகளில் இவை அச்சிடப்படுவதுண்டு. இதைப் பெரும்பாலான கவிஞர்கள் பின்பற்றினாலும் சில நீளமான கவிதைகளும் அமைதல் உண்டு. யும்சியோந்தோ கவிதைகளில் இவ்வகை நீளக் கவிதைகளைக் காணலாம்:
- உனக்கெத்தனை நண்பரெனக் கேட்கின்றீர்? தண்ணீரும் கல்லும், மூங்கிலும் பைனும்.
- You ask how many friends I have? Water and stone, bamboo and pine.
- கிழக்கே தோன்றும் நிலாவென் இனிய நண்பன்.
- The moon rising over the eastern hill is a joyful comrade.
- இந்த ஐவரினும் வேறென்ன மகிழ்ச்சி வேண்டும் எனக்கு?
- Besides these five companions, what other pleasure should I ask?
யுன் சியோந்தோ (1587–1671) மீனவன் பர்வையிலான மாறும் பருவங்கள் பற்றிய 40 சீயோ கவிதைகளையும் இயற்றியுள்ளார்.
எடுத்துரைப்போ அல்லது கருப்பொருளோ இவ்வகைக் கவிதையின் முதல் வரி சீக்கற் சூழகை அறிமுகம் சேய்ய்ம்; இரண்டாம் வரி அதை வர்த்தெடுக்கும்; மூன்றாம் வரி வியப்புதரும் திருப்பம் உள்ள வலிவான முடிவைத் தரும். இம்முடிபு முன்வரிகளில் எழுப்பப்பட்ட சிக்கலுக்கான தீர்வை நினைவுகூரத் தக்கவகையில் தரும்.
சீயோ எனபது அடிப்படையில் பாடல் வடிவமாகும். இம்மெல்லிசை வடிவம் அரசு நாளோலக்க மன்றங்களில் பெயர்பெற்றது. இது யாங்பான் மகளிரிடையே சமயம் அல்லது மெய்யியல் உரைப்பாக விளங்கியது. ஆனால், இதற்கு இணையான மக்கள் வெளிப்பாட்டு முறையும் உருவாகியுள்ளது. சீயோ இசைமீட்டிப் பாடப்படும். இம்மரபு தொடர்ந்து வழங்கி வருகிறது. இச்சொல் முதன்முதலில் இசிக்கு மட்டுமே வழங்கிய சொல்லாகும். பின்னர் இது மெல்லிசைப் பாடலைக் குறிக்க வந்தது.
காசா
[தொகு]காசா உரைவீச்சுக் கவிதையாகும். இது தனி மாந்தரின் உணர்ச்சியும் அடக்கலம்; நன்னெறி புகட்டுவதாகவும் இருக்கலாம். காசா என்பது ஒவ்வொரு வரியிலும் மூவசை அல்லது நான்கசைகளைக் கொண்ட எளிய இருவரிக் கவிதையாகும். சிலர் இதைக் கட்டுரை வடிவமாகவும் கருதுவதுண்டு. இதை பொதுவான கருப்பொருளாக இயற்கை, நன்மாந்தரின் இயல்பு அல்லது ஆண் பெண் காதல் போன்றவை அமையும். இந்த வடிவம் முதலில் கொரியியோ காலத்தில் எழுந்தது. இது யோசியோன் காலத்தில் பரவலாகிப் பேரும்புகழுடன் விளங்கியது. இது பொதுவாக எவராலும் பாடப்பட்டாலும் யாங்பான் மகளிரிடம் பெயர்பெற்றிருந்தது. இவ்வடிவத்தினை 16 ஆம் நூற்றாண்டு கவிஞர் யேயோங் செயோl செழுமைப்படுத்தினார். இது சீரிய வடிவமாக்க் கருதப்படுகிறது. இது இரண்டாகப் பகுத்த இணைவரிகளைக் கொண்டுள்ளது.
புத்தியற் காலக் கவிதைகள்
[தொகு]கொரியக் கவிதையின் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எழ்சுரா பவுடு. எலியட் போன்றோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளில் படிம உத்தியும் புத்தியற் கால வடிவங்களும் அறிமுகம் ஆகின. தென்கொரியவில் 1953 கொரியப் போருக்குப் பிறகு நாட்டுப்பற்றுக் கவிதைகள் பெரிய வரவேற்பைப் பெற்றன.
கொரியாவில் 1970களுக்குப் பின்னர் தன்னுணர்ச்சிப் பாடல்கள்/காதல் பாடல்கள் ஓங்கலாக விளங்குகிறது. 21 ஆம் நூற்றாண்டுக் கொரியாவில் கவிதைகள் பெரிதும் போற்றப்படுகின்றன. வெளியிடப்படும் கவிதை நூல்களும் எலிய வடிவில் எழுதுவதும் பெருகியுள்ளன.
புத்தியற் காலக் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 10,300 கொரியக் கவிதைகள் மொழிசார் தகவலுடன் அடங்கி உள்ளன.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lee, Peter H. (2002). The Columbia Anthology of Traditional Korean Poetry. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-11112-6.
- ↑ Kim Byong-sun (2002). "The Present Conditions and Tasks in Constructing the Database of Korean Literary Materials Centering on the Korean Poetry Corpus". The Review of Korean Studies 8 (4): 105–140. http://review.aks.ac.kr/AttachedFiles/02기획논문_4김병선.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]