கொடுமுடி ச. சண்முகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுமுடி ச. சண்முகன் ஒரு ஆய்வாளர், தமிழறிஞர். இவரது தமிழர் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வோடு "பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்" இத்துறையில் ஒரு முக்கிய ஆக்கம். இவர் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் பல பொறுப்புகளில் பணியாற்றினார். அதன் பின்னர் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை, சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர்.[1] இவர் கட்டிடப் பொறியியலில் அளக்கையியல், பொறியியல் வரைவியல், மண்விசையியல் ஆகிய பட்டப் படிப்புக்கான பாட நூல்களை இயற்றியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட களஞ்சியம் காலாண்டிதழில் பல பொறியியல் கட்டுரைகளையும் தமிழில் கலைசொல்லாக்கம் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் அறிவியல் களஞ்சியத்தில் கட்டிடப் பொறியியல் துறையின் பதிப்பாசிரியராக பணிப்ரிந்தார். அறிவியல் களஞ்சியத் திட்டமிடலிலும் உருவாக்கத்திலும் தொடக்கநிலையில் பெரும்பங்கு வகித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ச. கமலக்கண்ணன். (2009). 'பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்: நூல் அறிமுகம்'. வரலாறு. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுமுடி_ச._சண்முகன்&oldid=3881592" இலிருந்து மீள்விக்கப்பட்டது