உள்ளடக்கத்துக்குச் செல்

கொசெனிகோவ் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொசெனிகோவ் சுரப்பி (Koschevnikov gland) என்பது தேனீயின்[1] கொட்டு உறுப்பின தண்டுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சுரப்பி ஆகும். தேனீ கொட்டும் போது வெளியாகும் எச்சரிக்கை இயக்கு நீரை இது சுரப்பி உற்பத்தி செய்கிறது. இந்த இயக்குநீரில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு வேதிச் சேர்மங்கள் உள்ளன. இதில் பெண்டிலாசெட்டேட், பியூட்டைல் அசிட்டேட்டு, 1-எக்சேனால், என்-பியூட்டானால், 1-ஆக்டானால், எக்சிலாசெட்டேட், ஆக்டிலேசெட்டேட் மற்றும் 2-நோனேனால் ஆகியவை அடங்கும். இந்த கூறுகள் குறைந்த வாய்ப்பாட்டு எடையினைக் கொண்டுள்ளன. இவை விரைவாக ஆவியாகும் தன்மையுடையன. இந்த சேர்மங்களின் தொகுப்பு அனைத்து இயக்குநீரிலும் குறைவானதாகு உள்ளது. எச்சரிக்கை இயக்குநீர் மற்ற விலங்குகளைத் தாக்கும் போதும், தேனீக்களை ஒரே இடத்தில் கூடுவதற்கும் பயன்படுகிறது. புகையானது இந்த இயக்குநீரின் செயல்திறனைக் குறைக்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bortolotti, Laura; Costa, Cecilia (2014). Neurobiology of Chemical Communication. CRC Press.
  2. பி. மாரியப்பன் (2019). "5. தேனிக்களின் சமுதாய வாழ்க்கை". தேனீ வளர்ப்பு (1 ed.). தஞ்சாவூர்: இயல் பப்ளிக்கேசன். p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789385283222. {{cite book}}: More than one of |at= and |pages= specified (help); Unknown parameter |trans_title= ignored (help); Unknown parameter |மொழி-= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசெனிகோவ்_சுரப்பி&oldid=3920828" இலிருந்து மீள்விக்கப்பட்டது