கொங்காயி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்காயி அம்மன் என்பவர் தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்களுள் ஒருவராவார். நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலையில் இவருக்கான கோயில் அமைந்துள்ளது. ஏழு கன்னிமார்களுள் ஒருத்தியாக இந்த அம்மன் குறிப்பிடப்படுகிறார்.

கொங்காயி அம்மன் கதை[தொகு]

கொல்லிமலையில் பாட்டன் மற்றும் கருப்பாயி தம்பதியினர் வாழ்ந்து வந்தார்கள். பாட்டன் 50 வயதானவர். இவர் ஈரோட்டு சந்தையில் செண்பகப்பூ, பலா, எலுமிச்சை, மாதுளை, ஏலம் ஆகிய மலைப்பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அக்காலத்தில் கொல்லிமலை மக்கள் வீட்டில் தயாரித்த உணவை மட்டும் உண்ணும் வழக்கம் கொண்டிருந்தார்கள். அதனால் பாட்டன் தன்னுடன் கருநெல்லஞ்சோறு, கருமாட்டுத்தயிர் மற்றும் கருவாழைப்பழம் ஆகியவற்றை எடுத்துச் சென்றார்.

ஈரோடு சந்தையில் பொருள்களை விற்ற பாட்டன், கொல்லிமலைக்கு திரும்பும் வழியில் உணவருந்த ஒரு கிணற்றில் கை கால்களை கழவிவிட்டு தயாரானார். அப்போது ஏழு கன்னிகளான கொங்காயி, மாரி, காளி, பிடாரி, கன்னியம்மன், செல்லாயி, அங்காயி ஆகியோர் குழந்தைகளாக மாறி அவரிடம் சாப்பாடு கேட்டனர். தனக்கு மட்டுமே உணவு எடுத்துவந்திருந்த பாட்டன் மறுத்தார். அத்துடன் அடுத்த கிணறுக்கு சென்று அமர்ந்து உண்ணத் தொடங்கினார், அங்கு கொங்காயி மட்டும் சென்று உணவு கேட்டார். அப்போதும் பாட்டன் மறுத்துவிட்டார்.

மறு கிணறில் பாட்டன் உணவருந்த முயன்றபோது உணவானது புழுவாகத் தோன்றியது. அதனால் தன்னுடைய தவறை உணர்ந்த பாட்டன் கொங்காயிக்கு உணவு கொடுத்தார். அதன் சுவையில் மயஙகிய கொங்காயி கொல்லிமலையில் பாட்டன் இருக்கும் இடத்தற்கு அருகேயுள்ள பாறையில் தங்கினார். கொங்காயுடன் பிற கன்னிகளும் தங்கினர்.

கருவி நூல்[தொகு]

கொல்லிமலை மக்களின் நாட்டுப்புற இலக்கியங்கள் - அ. பிறைமதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்காயி_அம்மன்&oldid=2086481" இலிருந்து மீள்விக்கப்பட்டது