உள்ளடக்கத்துக்குச் செல்

கொகஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொகஷி
கொகஷி பொம்மை செய்யப்படுகிறது
சப்பனிய அஞ்சல் தலையில் கொகஷி

கொகஷி (Kokeshi (こけし こけし?, kokeshi) (こけし, こけし, kokeshi), என்பவை சப்பானிய பொம்மைகள். இவை வடக்கு சப்பானை பூர்வீகமாக கொண்டவை. இவை மரத்தைக் கொண்டு கைகளால் செய்யப்படும் பொம்மைகளாகும், இவை பெரிய உருண்டைத் தலை, கை கால் இல்லாத உருளை உடல் அதில் எளிய வண்ணக் கோடுகளுடன் இருக்கும். கண், காது, மூக்கு எனச் சில கறுப்புத் தீற்றல்கள் மட்டுமே முகத்தில் வரையப்படும். உடலில் கறுப்பு, சிவப்பு, மஞ்சளில் எளிய பூ வேலைப்பாடுகள் இருக்கும். அதன் மேலே மெல்லிய மெழுகு பூச்சுடன் இருக்கும். கோகேஷி பொம்மைகளின் ஒரு தனிச் சிறப்பானது அவை கை கால்கள் இல்லாது இருப்பது ஆகும். மொம்மையின் கீழே பொதுவாக அதை உருவாக்கிய கலைஞரின் கையொப்பத்தைக் கொண்டிருக்கும்.

வரலாறும், சொற்பிறப்பியலும்

[தொகு]

கோகேஷியின் தோற்றம் மற்றும் பெயர் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை,[1] இது வரலாற்றுரீதியாக 小芥子, 木牌子, 木形子, மற்றும் 木芥子 என எழுதப்பட்டது. 1939 ஆகத்தில் நருக்கா ஓன்சனில் உள்ள ஜப்பானின் அனைத்து ஜப்பானிய கொக்கேஷி கண்காட்சியில் (全国こけし大会) ஹிரகனா உச்சரிப்பு こ け என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மரபுவழியாக "கொகஷி" என்ற சொல்லானது மர (木 ki, ko) அல்லது சிறிய (小 கோ) மற்றும் பொம்மைகள் (芥子 keshi) ஆகிய சொற்களிலில் இருந்து பெறப்பட்டது என்பது ஒரு நம்பத்தகுந்த கோட்பாடாகும்.

கொகஷி முதலில் டோக்கியோ பிராந்தியத்திலும் பிறகு மற்ற மருத்து நீருற்று பகுதிகளுக்கும் பரவியது.[2] சப்பான் நாட்டின் வட கிழக்கில் உள்ள ஒன்சென் வெந்நீர் ஊற்றுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி என்பதால் உடற்பிடிப்பு கருவிகளில் ஒன்றாகவும் இந்தப் பொம்மை ( (1600-1868) தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொம்மை

[தொகு]

செர்ரி, மிசுகி போன்ற மரங்களில் இருந்து கொகஷி பொம்மைகள் செய்யப்படுகின்றன. பொம்மை செய்யத் தொடங்குவதற்கு முன்னர் மரமானது பல மாதங்கள் பக்குவப்படுத்தப்படும். பின்னர் முதலில் கரடாக மரத்திலிருந்து பொம்மையை வெட்டியெடுப்பார்கள். பின்னர் அதை கடைசல் எந்திரத்தில் கொடுத்துக் கடைந்து மெருகேற்றுவார்கள். தலையையும் உடலையும் தனித்தனியாகச் செய்து பின்னர் பொருத்தி வண்ணங்களைத தீட்டுவார்கள். ஆண், பெண் என இரண்டு பாலின கொகஷி பொம்மைகளும் உண்டு.

நம்பிக்கைகள்

[தொகு]

மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லாத அக்கால சப்பானில், குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்பும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுவதற்கு ஆசைப்படும் அம்மாக்களின் பிரார்த்தனையின் வெளிப்பாடாகவும் இந்த கொகஷி பொம்மைகள் இருந்துள்ளன.

ஈரத்தன்மையுள்ள மரங்களிலிருந்து செய்யப்படும் கொகஷி பொம்மைகளை வீட்டில் வைத்திருந்தால் தீ விபத்துகளிலிருந்து தடுக்கும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது

ஒரு சப்பானியக் குழந்தையின் குழந்தைப் பருவத்துடன் சேர்ந்தே கொகஷி பொம்மை இருப்பதால். அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு அதன் தொலைந்து போன குழந்தைப் பருவம் கொகஷிக்குள் நினைவாகத் தங்கிவிடுவதாக ஜப்பானியர்கள் நம்புகிறார்கள்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Newman, Michelle. "Kokeshi Dolls" பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம். Travelworld International Magazine, March/April 2007. Accessed 7 May 2009.
  2. Togatta Hot Spring பரணிடப்பட்டது 2009-09-26 at the வந்தவழி இயந்திரம், Japan-i. Accessed 7 May 2009.
  3. ஷங்கர் (7 பெப்ரவரி 2018). "கொகஷி". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 7 பெப்ரவரி 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொகஷி&oldid=4062642" இலிருந்து மீள்விக்கப்பட்டது