கைலாஸ் மானசரோவர் யாத்திரை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைலாஸ் மானசரோவர் யாத்திரை
நூலாசிரியர்சுவாமி கமலாத்மானந்தர், இராமகிருஷ்ண மடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மையாத்திரை
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், சென்னை
பக்கங்கள்185 (+8 புகைப்படங்கள்)

கைலாஸ் மானசரோவர் யாத்திரை, திருக்கயிலாய யாத்திரை அனுபவங்களின் கட்டுரை வடிவங்களின் தொகுப்பு நூலாகும். இந்நூல் சென்னையிலுள்ள இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது.[1]

முன்னுரை[தொகு]

திருக்கயிலாயத்தின் பெருமை, இந்து, புத்த, ஜைன, பொம்பா மதத்தில் திருக்கயிலாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் முக்கியத்துவம், கயிலாயத்தை தரிசித்த அடியார்கள் பற்றிய பெரிய புராணச் செய்திகள் குறித்து முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நூல் ஆசிரியர்[தொகு]

இந்நூல் ஆசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவரும், 'ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ தமிழ் மாதப்பத்திரிக்கையின் முந்தைய ஆசிரியர்களில் ஒருவரும் ஆவார். 1998 இல் 20 பேர் கொண்ட குழுவுடன் மேற்கொண்ட திருக்கயிலாய யாத்திரை அனுபவங்களை ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் தொடர் கட்டுரையாக (1998-2002) எழுதினார். இக்கட்டுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், கட்டுரையுடன் பல புதிய பகுதிகளும் தகவல்களும் சேர்க்கப்பட்டு ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக அமையும் விதத்தில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

வண்ணப்படங்கள்[தொகு]

சிறப்புப் பக்கங்களில் புகைப்படங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:

  • முதல் நாள் கையிலை மலையை வலம்வரும் திருக்கயிலாயக் காட்சி
  • முதல் நாள் பரிக்ரமப் பாதை
  • 2 ஆம் நாள் பரிக்ரமத்தில் (கிரிவலம்) மிகக் கடினமான ஏற்றம் ’டோல்மா பாஸ்’
  • 3 ஆம் பரிக்ரமப் பாதை : ஒரு காட்சி
  • திருக்கயிலாயம் (மேற்கு முகம்)
  • திருக்கயிலாயம் (வடக்கு முகம்)
  • திருக்கயிலாயக் காட்சி (தெற்கு முகம்)
  • குர்லா மாந்தாதா மலையின் பின்னணியில் மானசரோவர்
  • உதய வேளையின் பொன்மயமான கயிலாயம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]