கையெழுத்து (எழுத்து)
கையெழுத்து (Handwriting) கையில், பேனா அல்லது கரிக்கோல் போன்ற எழுத்துக் கருவியைக் கொண்டு எழுதுவதாகும். இது பெரிய எழுத்து மற்றும் கூட்டெழுத்து ஆகிய இரண்டினையும் உள்ளடக்கியதாகும். ஆனால்,மரபார்ந்த வனப்பெழுத்து அல்லது எழுத்துரு ஆகியவற்றில் இருந்து வேறுபட்டதாகும். ஒவ்வொரு நபரின் கையெழுத்தும் தனித்துவமானதாகும். எனவே, ஒரு ஆவணத்தின் எழுத்தாளரை சரிபார்க்க இதைப் பயன்படுத்தலாம். ஒரு நபரின் கையெழுத்து மோசமடைவது பல்வேறு நோய்களின் அறிகுறியாகும் அல்லது அதன் விளைவாகும். தெளிவான மற்றும் ஒத்திசைவான கையெழுத்தை உருவாக்க இயலாமை டிஸ்கிராஃபியா என்று அழைக்கப்படுகிறது.
தனித்தன்மை
[தொகு]கையொப்பம் அல்லது வழக்கமாக எழுதுவது எதுவாயினும் ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கையெழுத்துப் பாணி உள்ளது. பண்பாட்டுச் சூழல் மற்றும் ஒருவர் எழுதக் கற்றுக் கொள்ளும் முதல் மொழியின் எழுத்து வடிவத்தின் சிறப்பியல்புகள் ஆகியன ஒருவரின் சொந்த தனித்துவமான கையெழுத்துப் பாணியின் வளர்ச்சியில் முதன்மையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. [1] தோற்றம் மற்றும் மரபியல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் கூட ஒரே கையெழுத்தைக் கொண்டிருப்பதில்லை. [2]
கையெழுத்தின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
- எழுத்துக்களின் குறிப்பிட்ட வடிவம், எ.கா. அவற்றின் வட்டத்தன்மை அல்லது கூர்மை
- எழுத்துகளுக்கு இடையே வழக்கமான அல்லது ஒழுங்கற்ற இடைவெளி
- எழுத்துக்களின் சாய்வு
- ஒத்திசைவுப் பாங்கு அல்லது இலயமின்மை
- காகித அழுத்தம்
- எழுத்துக்களின் சராசரி அளவு
- எழுத்துக்களின் தடிமன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sargur Srihari, Chen Huang and Harish Srinivasan (March 2008). "On the Discriminability of the Handwriting of Twins". J Forensic Sci.; 53(2):430–46.
- ↑ Tomasz Dziedzic, Ewa Fabianska, and Zuzanna Toeplitz (2007). Handwriting of Monozygotic and Dizygotic Twins. Problems of Forensic Sciences.