கைப்பேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைப்பேசியா (Ὑπατία)
பிறப்புகிபி 351–370
அலெக்சாந்திரியா
இறப்பு415[1]
அலெக்சாந்திரியா
காலம்பண்டைய மெய்யியல்
பகுதிஅலெக்சாந்திரியா
பள்ளிபுதுப்பிளாட்டோனியம்
முக்கிய ஆர்வங்கள்
கணிதம், வானவியல்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

கைப்பேசியா எகிப்தின், அலெக்சாந்திரியாவில் கிபி 350-370வாக்கில் பிறந்து கிபி 415 வரை[1] வாழ்ந்த கணிதவியலாளரும் மெய்யியலாளரும் வானியலாளரும் ஆவார்.[2][3][4][5]. வரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட முதல் பெண் கணிதவியலாளர் என்று இவரைச் சுட்டலாம்[6]. அகோரா என்ற திரைப்படம் இவரை கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியவராகவும், அதனால் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டவராகவும் காட்டுகிறது. சூரியக் குடும்பத்தின் வான்பொருள்களின் வட்டணை (சுற்றுப்பாதை) நீள்வட்டமானது என்பதை கிட்டத்தட்ட இவர் கண்டுபிடித்துவிட்டதாகவே காட்டப்படுகிறது. இக்கருத்தை இவர் காலத்துக்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்பே யோகான்னசு கெப்ளர் கண்டுசொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Colavito,A. & Petta,A. (April 2004), Hypatia: Scientist of Alexandria. Milan, Italy: Lightning Print Ltd. (ISBN 978-88-488-0420-2).
  2. Krebs, Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries; The Cambridge Dictionary of Philosophy, 2nd edition, Cambridge University Press, 1999: "Greek Neoplatonist philosopher who lived and taught in Alexandria."
  3. Mueller, I.; L.S. Grinstein & P.J. Campbell (1987). Women of Mathematics: A Biobibliographic Sourcebook. New York: Greenwood Press. 
  4. Hypatia, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்: "Egyptian Neoplatonist philosopher who was the first notable woman in mathematics."
  5. Toohey, Sue (2003). "The Important Life & Tragic Death of Hypatia". Skyscript.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2007-12-09.
  6. Socrates Scholasticus. Ecclesiastical History இம் மூலத்தில் இருந்து 2016-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160408045717/http://cosmopolis.com/alexandria/hypatia-bio-socrates.html. பார்த்த நாள்: 2013-09-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைப்பேசியா&oldid=3241715" இலிருந்து மீள்விக்கப்பட்டது