கைபர் தொடர்வண்டிப் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைபர் தொடர்வண்டிப் பயணம் ஒரு சுற்றுலாத் தொடர்வண்டிப் பயணம் ஆகும். இத்தொடர்வண்டி பெஷாவர், லண்டி கொட்டால் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே, கைபர் கணவாய் வழியாக ஓடியது. இப்பயணமானது வரலாற்றின் காலங்களுக்கு உள்ளே செல்லும் பயணம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்தொடர்வண்டி செல்லும் 52 கிலோமீட்டர் தொலைவில், 34 குகைகளையும் 92 பாலங்களையும் கடந்து செல்கிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இச்சேவை இருந்தது. உள்ளூர் மக்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. 1925 நவம்பர் 3 ஆம் நாள் இந்தத் தொடர்வண்டிப்பயணம் அதிகாரபூர்வமாய் ஆரம்பிக்கப்பட்டது. 1947 பாகிஸ்தான் விடுதலைக்குப்பின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஓடுமாறு இந்த தொடர்வண்டிப் பயணம் அமைக்கப்பட்டது. போதுமான நிதி ஆதாரம் இல்லாதலால் 1982 ஆம் ஆண்டு இந்தச் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் தனியார் அமைப்புகள் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயலாற்றி, 1990 -ல் மீண்டும் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் மூடப்பட்டது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Khyber Pass Railway Author: Owais Mughal, Publisher: http://pakistaniat.com , Retrieved on 15 July 2012

இதையும் பார்க்கவும்[தொகு]

இணைப்புகள்[தொகு]