கைக்குட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கைக்குட்டை

கைக்குட்டை, சதுர வடிவிலான ஒரு துணி ஆகும். பொதுவாக, ஒருவரின் உடற் தூய்மையை பேணுவதற்காக கைக்குட்டையை சட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்வர். சட்டைப் பை இல்லாத பெண்கள் இதை கையில் வைத்திருப்பதும் உண்டு. முகம், கை துடைக்கவோ சளியை வெளியேற்றவோ கைக்குட்டை பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஆண்களின் மேற்சட்டையில் அழகுக்காக வைத்துக் கொள்வதும் உண்டு. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்டு கைக்குட்டையைக் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. வரலாற்று நோக்கில், சரணடைவதையோ சண்டை நிறுத்தத்தையோ தெரிவிக்க வெள்ளைக் கொடிக்கு பதிலாக வெள்ளைக் கைக்குட்டைகள் பயன்பட்டுள்ளன.

பல இடங்களில், முகத் தாளுக்கு (Facial tissue paper) பதிலாக கைக்குட்டையை வைத்திருப்பது பழம்போக்காகவும், குறிப்பாக வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உடற் தூய்மை அற்றதாகவும் கருதப்படுகிறது. எனினும், கைக்குட்டை வைத்திருப்பது சூழல் நோக்கில் நன்மை உடையதாகவும் கருதப்படுகிறது. சப்பான், இலங்கையில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்த ஒருவரின் அடையாளமாக கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்குட்டை&oldid=3241699" இலிருந்து மீள்விக்கப்பட்டது