பேச்சு:கைக்குட்டை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

hygiene = உடற் தூய்மை என்று தமிழாக்கி இருக்கிறேன். சரியா? health-conscious, diet-conscious- environmentaly-conscious, money-conscious என்பதில் உள்ள consciousஐ எல்லா இடங்களிலும் பொருந்துமாறு எப்படித் தமிழாக்குவது? --Ravidreams 17:54, 24 பெப்ரவரி 2007 (UTC)

  • ரவி சொற்றொடராகத் தந்தால் மொழி பெயர்த்தல் எளிது. health-conscious = உடல்நல-உணர்வு, diet-conscious = உண்ணறிவு, உணவறிவு, உணவுத் தேர்வறிவு (அவர் உணவுத் தேர்வறிவுடன் இருப்பார். அதுவும் இப்பொழுது மருத்துவர் கூறியிருப்பதால் இன்னும் அதிகக் கவனமாக இருக்கிறார்), environmentaly-conscious =சூழல்-உணர்வு, money-conscious =பண-முந்துணர்வு, பணக்கரிசனம், பண-நாட்டம், பணக்-குறி, பணக் கரிசனம்.
  • கண்ணூடு என்னும் ஒரு சொல், மிகவும் கருத்தாக இருப்பதைக் குறிக்கும். அதேபோல அக்கறை, கரிசனம், நுனிப்பு, நுனிப்புடன் இருத்தல் என்று பல சொற்கள் உள்ளன. தனிச் சொற்களாக மொழி பெயர்த்தல் நல்லதல்ல. எழுத்துச் சூழலோடு தம்ழில் சிந்தித்து பெயர்த்தல் வேண்டும்.

--செல்வா 19:57, 24 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி, செல்வா. சூழலுக்கு ஏற்பவும் நம் மரபுக்கேற்பவும் தமிழாக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன். உணர்வு என்ற சொல் environment-conscious என்ற சொல்லுக்கு பொருந்த வரும் என்று நினைக்கிறேன்--Ravidreams 20:54, 24 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, போற்றுதல் என்பதனையும் சூழலுக்கு ஏற்றார்போல ஆளலாம். உடல்நலம் போறி நடக்க வேண்டும், உணவொழுக்கம் போறி வாழ வேண்டும், சூழல் போற்றி செயல்பட வேண்டும். Hygiene என்பதற்கு உடற் தூய்மை என்பது சரியே. உடற் தூய்மை புறத்தூய்மை, உளநலம் பேணிதல் அகத்தூய்மை. போற்றுதல், பேணுதல் ஆகிய சொற்களும் சில இடங்களில் பொருந்தும். நீர்மை என்னும் சொல்லும் பயன்படும். நீர்மை என்பதும் தூய்மை என்பதை அழகாக உணர்த்தும். உடல்நீர்மை = body-hygiene, சூழல்நீர்மை = healthy environment.

--செல்வா 21:06, 24 பெப்ரவரி 2007 (UTC)

நீர்மையை விட தூய்மை பொது வழக்கில் எளிதில் புரியும் என்பதால் தூய்மையையே பயன்படுத்துக்கிறேன். சுகாதார அமைச்சர் என்பதை நலவாழ்வு அமைச்சர் என்று சொல்லலாமா?--Ravidreams 21:57, 24 பெப்ரவரி 2007 (UTC)

நல வாழ்வு நல்வாழ்வு. எனவே நல்வாழ்வு அமைச்சர் எனலாம். --செல்வா 23:17, 24 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கைக்குட்டை&oldid=228510" இலிருந்து மீள்விக்கப்பட்டது