உள்ளடக்கத்துக்குச் செல்

கே. விசாலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. விசாலினி
K. Visalini
பிறப்புதிருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியா
கல்விதொழில்நுட்பவியல் இளையர்
செயற்பாட்டுக்
காலம்
2003-முதல்
அறியப்படுவதுமிக உயர்ந்த சரிபார்க்கப்பட்ட நுண்ணறிவு எண் 225
இளம்பெண் [சி. சி. என். ஏ] சான்றிதழ்
பெற்றோர்கல்யாண குமாரசாமி (தந்தை)
எசு.சேது ராகமாலிகா (தாய்)

கே. விசாலினி (K. Visalini) என்பவர் மிக உயர்ந்த 225 என்ற நுண்ணறிவு எண் கொண்ட ஓர் இந்திய மேதையாவார். 11 வயது மட்டுமே கொண்ட இவருடைய நுண்ணறிவு மதிப்பு அதிகாரப்பூர்வமாக சோதிக்கப்பட்டதாகும்.[1] சிசுகோ வலைப்பின்னல் இணை நிறுவனர் சான்றிதழ், எக்சின் எனப்படும் உலகாய தொழில் நுட்பச் சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு தொடர்பான பல்வேறு மாநாடுகளில் பேச்சாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் விசாலினி கலந்து கொண்டுள்ளார்.[1][2][3][4][5][6][7][8]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கே. விசாலினி 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் பிறந்தார்.[9] இவரது தந்தை மின்னியல் வல்லுநராகவும் தாய் அனைத்திந்திய வானொலியில் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தனர். விசாலினி அசையா நாக்கு நோயுடன் பிறந்தார். தாயார் ராகமாலிகா விசாலினியை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகளையும் அதனுடன் இணைந்த பதில்களையும் இவரிடம் அடிக்கடி சொல்வார்.

கல்வி

[தொகு]

பள்ளிப் படிப்பின் போது, விசாலினி இரண்டு முறை இரட்டை உயர்வு பெற்று வகுப்புகளில் முன்னேறினார். தனது ஒன்பதாம் வகுப்புக் கல்வியைத் தொடர்வதற்குப் பதிலாக, கலசலிங்கம் கல்வி நிறுவனத்தில் பி.டெக். திட்டத்தில் ஒரு விதிவிலக்கான மாணவராக அனுமதி பெற்றார். இங்கும் விரைவுபடுத்தப்பட்ட திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மாறாக மூன்று ஆண்டுகளில் இளங்கலை பொறியியல் திட்டத்தை முடிக்க அனுமதிக்கப்பட்டார். மொத்த 10 மதிப்பெண்களுக்கு 9.6 மதிப்பெண்களை நிகரமாகப் பெற்று தேர்ச்சியும் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "11 year old Indian girl rated with highest IQ in the world". The weekend leader. http://www.theweekendleader.com/Success/822/beyond-her-years.html. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  2. "New world record by student". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-world-record-by-student-claimed/article2044215.ece. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  3. "Visalini - conference". Indian Express. http://www.newindianexpress.com/cities/chennai/article564588.ece. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  4. "Network bulls". Cisco champs இம் மூலத்தில் இருந்து 16 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150916190729/http://www.ciscochamps.com/2014/04/visalinis-journey-at-network-bulls.html. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  5. "TEDx speakers". TED website. http://www.ted.com/tedx/events/3312. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  6. "Parents seek government help". The Asian Age. http://archive.asianage.com/india/prodigy-s-parents-seeks-tn-govt-help-426. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  7. "Worlds youngest MCP and CCNA". brainprick.com இம் மூலத்தில் இருந்து 7 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150907000038/http://brainprick.com/vishalini-the-worlds-youngest-mcp-and-ccna. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  8. "11 year old Visalini". divyabhaskar.com. http://www.divyabhaskar.co.in/news/NAT-k-vishalini-most-iq-2562337.html. பார்த்த நாள்: 29 Aug 2015. 
  9. Kumarasamy, Visalini. "Profile". kvisalini.com. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._விசாலினி&oldid=4110698" இலிருந்து மீள்விக்கப்பட்டது