கே. பி. ஜானகி அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.பி.ஜானகி அம்மாள்
பிறப்புகே.பி.ஜானகி அம்மாள்
(1917-12-09)9 திசம்பர் 1917
திருநகர், மதுரை
இறப்புமார்ச்சு 1, 1992(1992-03-01) (அகவை 74)
இருப்பிடம்மதுரை
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

கே. பி. ஜானகி அம்மாள் (K. P. Janaki Ammal) இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை[1], மேடை நாடகக் கலைஞர், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர்.[2]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1917 ஆம் ஆண்டு‍ பத்மநாபன் - லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். அதே குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை அவர் மணந்தார். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். பின்னர் அதே ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பின்னர் கடைசி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார்.[3]

ப.ஜீவானந்தம் மற்றும் பி.ராமமூர்த்தி ஆகியோரை வத்தலக்குண்டுவில் சந்தித்தார். கம்யூனிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு‍ 1940 ஆம் ஆண்டு‍ ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967 ஆம் ஆண்டில் பழைய மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்[தொகு]

ஜானகி அம்மாள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாட்டின் முதல் தலைவர் ஆவார்.[5]

இறப்பு[தொகு]

1992 மார்ச் 1 ஆம் தேதி இயற்கை எய்தினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The UNTOLD story of a freedom fighter". தி இந்து‍ ஆங்கிலம். 15 ஆகத்து 2013. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-untold-story-of-a-freedom-fighter/article5023501.ece. பார்த்த நாள்: 01 மார்ச் 2014. 
  2. "அன்னை கே.பி.ஜானகி அம்மாள் நினைவு நாள்". தீக்கதிர். 01 மார்ச் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 01 மார்ச் 2014. 
  3. 3.0 3.1 டி‍, சரவணன் (6 மார்ச் 2014). "A life of sacrifice". தி இந்து‍ ஆங்கிலம். http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/a-life-of-sacrifice/article5754498.ece. பார்த்த நாள்: 6 மார்ச் 2014. 
  4. "140 MADURAI EAST - Page No.264" இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320175222/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf. 
  5. 5.0 5.1 "Madurai’s very own freedom fighters". தி இந்து‍ ஆங்கிலம். 23 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/madurais-very-own-freedom-fighters/article3671344.ece. பார்த்த நாள்: 01 மார்ச் 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._ஜானகி_அம்மாள்&oldid=3577043" இருந்து மீள்விக்கப்பட்டது