உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சி. சுரேந்திர பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.சி.சுரேந்திர பாபு (K. C. Surendra Babu) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 2005 ஆம் ஆண்டு மாவோயிசுட்டுகளால் கொல்லப்பட்ட இந்திய காவல்துறை அதிகாரி ஆவார். கொல்லப்பட்டபோது இவர் முங்கேர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்தார்.[1] பீம் பந்து வனவிலங்கு சரணாலயத்திற்குள் 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று மாவோயிசுட்டுகளால் வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் கே.சி.சுரேந்திர பாபுவும் அவரது ஐந்து மெய்க்காவலர்களும் கொல்லப்பட்டனர்.[2] இவர் 1997 ஆம் ஆண்டு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியக் காவல் பணி அலுவலர் ஆவார். இவருடைய சொந்த மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இவருடைய மனைவி லட்சுமி தேவி பீகாரில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். இத்தம்பதியருக்கு கே சுசுமிதா என்ற நான்கு வயது மகள் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Hindu : Andhra Pradesh News : Police official who lived his vow". January 6, 2005 இம் மூலத்தில் இருந்து Jan 25, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050125042920/http://www.hindu.com/2005/01/07/stories/2005010702430500.htm. 
  2. "The Telegraph - Calcutta (Kolkata) | Bihar | SP killing case back on track". www.telegraphindia.com. Archived from the original on 2013-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._சுரேந்திர_பாபு&oldid=3784281" இலிருந்து மீள்விக்கப்பட்டது