கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 77°1′10.954″N 11°0′36.95″E / 77.01970944°N 11.0102639°E / 77.01970944; 11.0102639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2001
முதல்வர்முனைவர் நாகராஜன் முனுசாமி
அமைவிடம்
93 காமராஜர் சாலை, உப்பிலிபாளையம், சிங்காநல்லூர்- 641015

77°1′10.954″N 11°0′36.95″E / 77.01970944°N 11.0102639°E / 77.01970944; 11.0102639
இணையதளம்www.ksgcollege.com

கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஆங்கிலம்:KSG College of Arts and Science) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. கே.எஸ். கீதா என்பவர் தனது பெயரில் 1997 ஜூலை 4 ஆம் நாள் கே. எஸ். ஜி. கல்வி அறக்கட்டளையினைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் மூலம் 2001 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டது.[1]

பட்டப்படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் முதுகலைப் படிப்பும் உள்ளன.

  1. இளங்கலை கணினிப் பயன்பாடு
  2. இளங்கலை வணிகவியல்
  3. இளங்கலை கணினி அறிவியல்
  4. இளங்கலை தகவல்தொழில்நுட்பம்
  5. இளங்கலை பல்லூடகம் மற்றும் இணையத் தொழில்நுட்பம்
  6. இளங்கலை உயிரித் தொழில்நுட்பம்
  7. இளங்கலை உணவுத் தயாரிப்பு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மை
  8. இளங்கலை மின்னணுவியல் மற்றும் தொடர்பு சாதனங்கள்
  9. இளங்கலை கணிதம்
  10. இளங்கலை ஆங்கில இலக்கியம்
  11. இளங்கலை தொழில் நிர்வாகவியல்
  12. இளங்கலை உளவியல்
  13. முதுகலை ஆங்கில இலக்கியம்
  14. முதுகலை தகவல் தொழில்நுட்பம்
  15. முதுகலை கணிதம்
  16. முதுகலை உயிரித் தொழில்நுட்பம்
  17. முதுகலை வணிகவியல்

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தன்விவரக் குறிப்பு". ksgcollege. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.