கேவல் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேவல் சிங்

கேவல் சிங் (Kewal Singh 1915-1991) இந்திய நாட்டுத் தூதுவராக இருந்தவர். அயலகச் செயலாளராகவும் பதவி வகித்தார். சோவியத் யூனியன், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.1955 ஆம் ஆண்டில் இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

கேவல் சிங் 1915 ஆம் ஆண்டில் மேற்கு பஞ்சாபில் லியால்புர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இலாகூரில் பார்மன்  கிறித்தவக் கல்லூரியிலும் பின்னர் இலாகூரில்  சட்டக் கல்லூரியிலும் பின்னர் ஆக்சுபோர்டிலும்  பயின்றார். 1939 இந்திய சிவில் சர்வீசில் பணியில் சேர்ந்தார். இந்தியா  விடுதலை பெறும் காலம் வரை பஞ்சாபில் பணி புரிந்து வந்தார். அதன் பின் இந்திய அயலகச்  சேவைப் பணியில் சேர்ந்தார்.[2]

பணிகள்[தொகு]

பிரெஞ்சு வசம் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்றதும் புதுவை மாநில முதல் இந்திய அதிகாரியாகப் பொறுப்பேற்றார். பிரெஞ்சு நாட்டின் இந்திய ஐ கமிசனராக 1954 முதல் 1957 வரை பதவி வகித்தார். அதுமட்டுமல்லாமல் இசுடாக்கோம், இலண்டன் மற்றும் செருமனி ஆகிய நாடுகளின் துதரக அதிகாரியாகவும் இருந்தார்.[3][4] 1962 இல் போர்ச்சுகல் நாட்டுக்குத் இந்தியாவின் தூதுவராக இருந்தார் 1965 இல் பாகிஸ்தானில் இந்தியாவின் தூதுவராக இருந்தார்.

1966 முதல் 1968 வரை சோவியத் யூனியனுக்கும்  1976 முதல் 1977 வரை ஐக்கிய அமெரிக்காவுக்கும் தூதராக இருந்தார். தி.என் கவுலு க்கு அடுத்ததாக வெளியுறவுச் செயலராக 1972 முதல் 1976 வரை இருந்தார்.  இவர் இந்தப் பதவியில் இருந்த காலத்தில் சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது;[5] இலங்கையுடன் கடல்  எல்லை வகுக்கப்பட்டது; பாக்கிஸ்தானுடன் நல்லுறவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணி ஓய்வுக்குப் பின்னர்[தொகு]

அமெரிக்கத்  தூதராக இருந்து பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் யுசிஎல்ஏ மற்றும் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பேராசிரியராக இருந்தார். பிரிவினையும் பின் நிகழ்வுகளும் என்ற பெயரில் தம் நினைவுகளைத் தொகுத்து ஒரு நூல் எழுதினார்.  

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேவல்_சிங்&oldid=3241687" இருந்து மீள்விக்கப்பட்டது