கேரள உயர்நிலை நச்சுயிரியியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள உயர்நிலை நச்சுயிரியியல் நிறுவனம் (Institute of Advanced Virology)  இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உயிர் 360 உயிர் அறிவியல் பூங்காவில் அமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரசு தொற்று பரவியதைத் தொடர்ந்து கேரள அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒரு பிரிவாகிய கேரள உயிர்த்தொழில் நுட்பவியல் ஆணையத்தின் மூலம் கேரள அரசாங்கம் இந்நிறுவனத்தை உருவாக்கியது. [1] [2]

இந்நிறுவனத்திற்காக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. 2019 ஆம் ஆண்ட்டு பிப்ரவரி மாதம் 09 ஆம் நாள் கட்டுமானப் பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. [3] மேலும் இந்த நிறுவனம் உலகளாவிய வைரசு வலையமைப்புடனும் இணைக்கப்பட்டுள்ளது. [4]

இங்கு மருத்துவ நச்சுயிரியியல், வைரசு நோயறிதலியல், வைரசு தடுப்பூசியியல், வைரசு தடுப்பு மருந்து ஆராய்ச்சியியல், வைரசு பயன்பாடுகள், வைரசு தொற்றுநோயியல், வைரசு பரவியலியல் மற்றும் பொது சுகாதாரம், வைரசு மரபியல், உயிர்தகவலியல் & புள்ளிவிவரங்கள் மற்றும் பொது நச்சுயிரியியல் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pinarayi inaugurates first Institute of Advanced Virology". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  2. Ghafur, Abdul; Kumar, A. S. Anoop; Devadasan, N.; Meena, Amit; Jose, U. V.; Zachariah, Arun; Mohandas, A. C.; Indu, P. S. et al. (2019). "Outbreak Investigation of Nipah Virus Disease in Kerala, India, 2018" (in en). The Journal of Infectious Diseases 219 (12): 1867–1878. doi:10.1093/infdis/jiy612. பப்மெட்:30364984. 
  3. "Pinarayi inaugurates first Institute of Advanced Virology". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  4. "Global Virus Network (GVN) Centers of Excellence Contribute Expertise to Nipah Virus Outbreak in Kerala, India – GVN". gvn.org. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.