கேரளம்குண்டு அருவி
கேரளம்குண்டு அருவி Keralamkundu Waterfalls | |
---|---|
அமைவிடம் | மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 150 அடி |
கேரளம்குண்டு அருவி கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு அருகில் கருவரக்குண்டில் கும்பன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[1][2] இது மலப்புரத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 2016-ல் தேசிய சாகச சுற்றுலா வரைபடத்தில் இந்த அருவிச் சேர்க்கப்பட்டது.[3]
கண்ணோட்டம்
[தொகு]மலப்புரம் மாவட்டத்தில் தேசிய சாகச சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்ற முதல் சுற்றுலா மையம் கேரளாம்குண்டு அருவி ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1350 அடி உயரத்தில் கும்பன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[4] மலையின் பல்வேறு கிளை நதிகள் வழியாக ஓடும் நீரோடைகளின் சங்கமத்தால் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. இங்கு நிலவும் தட்பவெப்பம் குளிர்ச்சியாகவும், அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகவும் உள்ளது.[5] மேலும் சிலரின் உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாகவும் கருதப்படுகிறது.[6] நாட்முக்குப் பள்ளத்தாக்கு இங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஆமணக்கு தோட்டங்களுடன் அமைந்துள்ளது. கருவரகுண்டு, பொழுதுபோக்கு பகுதிகள் இங்கிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இளைஞர்களின் முக்கிய மையமாக உள்ளது.[7] செரும்ப் சுற்றுச்சூழல் கிராமம் கேரளாம்குண்டு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "സഞ്ചാരികളുടെ മനംമയക്കിയ കേരളാംകുണ്ട് വെള്ളച്ചാട്ടം പുനര്നിര്മ്മാണം അവസാന ഘട്ടത്തില്". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ "Keralamkundu waterfalls at Karuvarakundu in Malappuram". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ "Landslides fills in Keralamkund waterfalls". English Archives (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ "കോവിഡ് കാലത്ത് മാടി വിളിക്കുകയാണ് പ്രകൃതിയൊരുക്കിയ ഇൗ ചാരുത". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ "സാഹസികരേ, കേരളാംകുണ്ട് നിങ്ങളെ കാത്തിരിക്കുന്നു, പ്രകൃതി ഒരുക്കിയ സ്വിമ്മിങ്പൂളുമായി". Indian Express Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ Nijeesh, T. P. (October 16, 2016). "Youth meets watery grave in Keralamkund waterfalls". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ "വെള്ളച്ചാട്ടങ്ങളും പ്രകൃതിരമണീയമായ സ്ഥലങ്ങളും; വിസ്മയ കാഴ്ചകളൊരുക്കി മലപ്പുറത്തെ കരുവാരക്കുണ്ട്". Samayam Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
- ↑ "കരിമ്പായിക്കോട്ട, പന്തീരായിരം ഏക്കർ വനം, നാടുകാണി ചുരം: കാഴ്ച്ചകളാൽ സമ്പന്നമാണ് മലപ്പുറം ജില്ല". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.