கேரளத்தில் இறைமறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தில் இறைமறுப்பு நன்கு வேரூன்றி இருக்கும் கொள்கை ஆகும். பகுத்தறிவுக் கொள்கையாளர்கள், பொதுவுடமைக் கொள்கையாளர்களின் செல்வாக்கு ஆகியவை இங்கு செல்வாக்குச் செலுத்துவதாலும், கல்வியைப் பெரும்பான்மை மக்கள் பெற்றுள்ளதாலும் கேரளாவின் ஒரு குறிப்பிடத்தக்க விழுகாட்டினர் இறைமறுப்பினர் ஆவார். பல்வேறு இறைமறுப்புச் சங்கங்கள் கேரளாவில் உள்ளன.