கேன்டர்பரி பேராலயம்
தோற்றம்
கேன்டர்பரி பேராலயம் | |
---|---|
![]() | |
நாடு | இங்கிலாந்து |
சமயப் பிரிவு | கிருத்தவம் |
வலைத்தளம் | canterbury-cathedral |
இயல்புகள் | |
நீளம் | 510 அடி |
நடுக்கூட அகலம் | 71 அடி |
உயரம் | 235 அடி |
தளங்களின் பரப்பு | 43200 சதுர அடிகள் |
கேன்டர்பரி பேராலயம் (Canterbury Cathedral) என்பது இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் உள்ள மிகவும் தொன்மையான கிருத்தவப் பேராலயம் ஆகும். இதன் முதல் பேராயராக இருந்தவர் தூய அகுத்தினார். இவர் திருத்தந்தை கிரகோரியால் உரோமிலிருந்து கி.பி. 597 இல் சமயத்தொண்டாற்ற அனுப்பப்பட்டார்.[1]
வரலாறு
[தொகு]இரண்டாம் உலகப்போர்
[தொகு]இரண்டாம் உலகப்போரின் போது, செர்மனியின் வான்படை தாக்குதலின் சேதத்தில் இருந்து பாதுகாக்க, ஆலயத்தின் வண்ணக் கண்ணாடிகள் அகற்றப் பட்டு மாற்றுக் கண்ணாடிகள் வைக்கப்பட்டது. பின்னர் தாக்குதல் நடந்த போது, போலிக் கண்ணாடிகளே சேதம் அடைந்தன. இத்தாக்குதலில் கேன்டர்பரி ஆலயத்தின் நூலகமும், கேன்டர்பரி நகரின் பல பகுதிகளும் சேதமாகின.[2]
பேராயர்கள்
[தொகு]பெயர் | பங்கேற்ற ஆண்டு | நீங்கிய ஆண்டு |
---|---|---|
தூய அகுத்தினார் | நவம்பர் 16, 597 | மே 26, 604 [3] |
தூய இலாரன்சு | 604 | 619 |
மெலிட்டசு | 619 | 624 |
லான்பிரான்க் | 1070 | 1089[4] |
அன்சலம் | 1093 | 1109 |
இரால்ப் டி எசுகியூரசு | 1114 | 1122 |
வில்லியம் (கார்பியில்) | 1123 | 1136 |
தியோபால்ட் (பெக், பிரான்சு) | 1139 | 1161 |
தாமசு பெக்கெட் | 1162 | 1170 |
ரிச்சர்ட் (டோவர்) | 1174 | 1184 |
பால்ட்வின் (போர்டே) | 1184 | 1190 |
குபெர்ட் வால்டர் | 1193 | 1205 |
இசுட்டீபன் லாங்டன் | 1207 | 1228 |
ரிச்சர்ட் கிரான்ட் | 1229 | 1231 |
எட்மன்ட் ரிச் | 1234 | 1240 |
போனிபேசு (சேவாய்) | 1245 | 1270 |
ராபர்ட் கில்வார்ட்பி | 1273 | 1278 |
சாண் பெக்காம் | 1279 | 1292 |
ராபர்ட் வின்செல்சி | 1294 | 1313 |
வால்டர் ரெய்னால்ட்சு | 1313 | 1327 |
சைமன் மெப்பம் | 1328 | 1333 |
சாண் டிராட்போர்ட் | 1333 | 1348 |
தாமசு பிராட்வார்டைன் | 1348 | - |
சைமன் இசுலிப் | 1349 | 1366 |
சைமன் லாங்காம் | 1366 | 1368 |
வில்லியம் விட்லெசி | 1368 | 1374 |
சைமன் சட்பரி | 1375 | 1381 |
வில்லியம் கார்டனி | 1381 | 1396 |
தாமசு அருந்தேல் | 1396 | 1397 |
ரோசர் வால்டன் | 1397 | 1399 |
தாமசு அருந்தேல் | 1399 | 1414 |
கென்றி சிச்சலே | 1414 | 1443 |
சாண் தாபோர்ட் | 1443 | 1452 |
சாண் கெம்ப் | 1452 | 1454 |
தாமசு பவுர்சியர் | 1454 | 1486 |
சாண் மார்டன் | 1486 | 1500 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேன்டர்பரி பேராலய வரலாறு". Archived from the original on 2015-08-23. Retrieved 2015-08-23.
- ↑ "Canterbury Cathedral". Retrieved 2015-08-24.
- ↑ Philip, Schaff (2015). "12. Conversion of the other Kingdoms of the Heptarchy". The Christian Church from the 1st to the 20th Century. Delmarva Publications, Inc.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ "கேன்டர்பரி பேராயர்கள் (1070-1500)". Retrieved 2015-08-25.