உள்ளடக்கத்துக்குச் செல்

கேடு அவிகேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேடு அவிகேடு (Gad Avigad) ஓர் இசுரேலிய நாட்டு உயிர்வேதியியலாளர் ஆவார். 1930 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

அவிகேடு 1930 ஆம் ஆண்டு எருசலேமில் பிறந்தார். 17 வயதில் அவிகேடு பால்மாச்சு எனப்படும் இராணுவ அணியில் சேர்ந்தார். எருசலேம் இப்ரு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1958 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். அவிகேடு எபிரேய பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் இணை பேராசிரியராக பணிபுரிந்தார். 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று நியூ செர்சியிலுள்ள இராபர்ட் வூட் யான்சன் மருத்துவப் பள்ளியில் கல்வி கற்பித்தார்.

விருதுகள்[தொகு]

1957 ஆம் ஆண்டில், அவிகேடு இசுரேல் அறிவியல் பரிசை சுலோமோ எசுட்ரின் மற்றும் டேவிட் சிட்னி பீங்கோல்டு ஆகியோருடன் இணைந்து கூட்டாகப் பெற்றார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Israel Prize Official Site - Recipients in 1957 (in Hebrew)". Archived from the original on 2011-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேடு_அவிகேடு&oldid=2943282" இலிருந்து மீள்விக்கப்பட்டது