கெயூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெயூடா (Geuda) என்பது குருந்தம் அல்லது நீலக்கல் போன்ற கனிமத்தின் ஒரு வடிவமாகும் கே-யூ-டா என இதை உச்சரிக்கிறார்கள். இலங்கையில் இக்கனிமம் பிரதானமாகக் கிடைக்கிறது. இலங்கையில் கிடைக்கும் இரத்தினக் கற்களில் சுமார் 70% -80% கற்கள் கெயூடா வகை கற்களாகும். ஒளிவீசும் உரூத்தைல் கனிமம் இடம்பெற்றுள்ள காரணத்தால் இக்கனிமம் பகுதியாக ஒளிபுகும் தன்மையையும் பால்போன்ற நிறத்தோற்றத்தையும் பெற்று பிற இரத்தினக் கற்களைப்போல இயற்கையாகவே சற்று மதிப்பு கூடுதலான கனிமமாகக் கருதப்படுகிறது.

1970 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிப்பிற்கு முன்னதாக கெயூடா கனிமம் பெரிய உருளைக் கலன்களில் சேமித்து வைக்கப்பட்டது அல்லது வீட்டு தோட்டங்களில் சரளைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சூரியவெப்பத்தால் கற்களின் நிறம் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளானது [1] . கெயூடா வகைகளில் சில வெப்பத்தால் பாதிக்கப்பட்டு நீல நிறமாக மாறுகின்றன. சில வகை கற்கள் ஆக்சிசனேற்றம் அடைந்து சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன. கோவாங்கு புட்பராகம் ஆக்சிசனேற்றத்திற்குப் பின்னர் மஞ்சள் நீலக்கல்லாக நிறம் திரும்புகிறது. தோராயமாக 1800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கெயூடாவைச் சூடுபடுத்தும்போது இக்கல்லில் அலுமினியம் ஆக்சைடு அணிக்கோவை அமைப்பு மாறுதலுக்கு உள்ளாகிறது. இதைக் குளிர்விக்கும்போது மிக அதிக அளவில் நிறத்திலும் தெளிவிலும் மாற்றம் உண்டாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stephen M Voynick, Yogo: The Great American Sapphire. Mountain Press Publishing Company, Missoula. 1985
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெயூடா&oldid=2600031" இலிருந்து மீள்விக்கப்பட்டது