கெம்மா இலாவெண்டெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெம்மா இலாவெண்டெர் (Gemma Lavender) (பிறப்பு: 13 செப்டம்பர் 1986) ஒரு பிரித்தானிய வானியலாளரும் எழுத்தாளரும் இதழியலாளரும் ஆவார்.[1] இவர் இப்போது All About Space இதழின் பதிப்பாசிரியராக உள்ளார்.[2] இது பெரும்பிரித்தானியா, பவுர்னேமவுத் பிரித்தானிய வெளியீட்டாளர் வெளியிடும் அறிவியல் மாத இதழாகும்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இலாவெண்டெர் கெண்டில் உள்ள சாத்தமில் பிறந்தார். பிறகு வேல்சு பெம்புரோக்சயருக்கு இளம் அகவையிலேயே இடம் மாறினார். அங்கு வைட்லாந்தில் உள்ள இசுகோல் திப்ரின் தாப் பள்ளியில் படித்தார். பின்னர் கார்திப் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் மூதியற்பியல் பட்டம் பெற்றார்.[3] இவர் இயற்பியல் நிறுவனத்தின் வானியல் இன்று இதழோடு தொடர்பில் உள்ளார். நாசாவிலும் எழுத்தாளராக பணிபுரிகிறார். இவர் 2011 இல் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெம்மா_இலாவெண்டெர்&oldid=2661473" இருந்து மீள்விக்கப்பட்டது