உள்ளடக்கத்துக்குச் செல்

கெநூத் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரி மில்லர் 2008ஆம் ஆண்டுக்கான கெநூத் பரிசை வோல்கர் இசுட்ராசென்னுக்கு வழங்குதல்

டொனால்ட் ஈ. கெநூத் பரிசு (Donald E. Knuth Prize) அப்பெயர் கொண்டவர் நினைவாக கணினி அறிவியலின் ஆதாரங்களில் சிறப்புமிகு பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசு ஆகும்.

வரலாறு

[தொகு]

$5000 பெறுமானமுள்ள இந்தப் பரிசு 1996ஆம் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசினை கணினிப் பொறிமை சங்கத்தின் சிகாக்ட் (SIGACT) எனப்படும் படிமுறைத்தீர்வுகளும் கணியியலும் சிறப்பு ஆர்வலர் குழுவும் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியாளர் சங்க கணினி சமூகத்தின் (IEEE Computer Society) கணினியியலில் கணித அடிப்படைகளுக்கான தொழில்நுட்பக் குழுவும் இணைந்து வழங்குகின்றன. அடிப்படை கணினி அறிவியலில் முதன்மையான கருத்தரங்குகளான கணினிப் பொறிமை சங்கம் நடத்தும் அடிப்படை கணினியல் பயிலரங்கிலும் ஐஈஈஈ நடத்தும் கணினி அறிவியல் ஆதாரங்கள் பயிலரங்கிலும் மாற்றி மாற்றி வழங்கப்படுகின்றன.

வாகையாளர்கள்

[தொகு]
  • 1996 - ஆன்ட்ரூ யோவ்
  • 1997 - லெசுலி வாலியன்ட்
  • 1999 - லாசுலோ லோவாசு
  • 2000 - ஜெஃப்ரே டி. உல்மான்
  • 2002 - கிறிஸ்டோசு பாபடிமிட்ரியோ
  • 2003 - மிக்லோசு அஜ்டாய்
  • 2005 - மிகாலிசு யன்னகாகிசு
  • 2007 - நான்சி லின்க்
  • 2008 - வோல்கர் இசுட்ராசென்
  • 2010 - டேவிட் எஸ். ஜான்சன்
  • 2011 - ரவி கண்ணன்[1]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-04-29. பார்க்கப்பட்ட நாள் 2011-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெநூத்_பரிசு&oldid=3551157" இலிருந்து மீள்விக்கப்பட்டது