கெட்டி வில்லா
நிறுவப்பட்டது | 1954, மறுதிறப்பு 2006 |
---|---|
அமைவிடம் | 17985 பசிபிக் கடற்கரை நெடுஞ்சாலை, பசிபிக் பாலிசாடேஸ், கலிபோர்னியா |
வகை | கலை அருங்காட்சியகம் |
சேகரிப்பு அளவு | 44,000 கிரேக்க, உரோமானிய, மற்றும் யூட்ருஸ்கான் பழங்காலச் சின்னங்கள் |
வருனர்களின் எண்ணிக்கை | 453,902 (2016)[1] |
இயக்குனர் | திமோதி பாட்ஸ் |
வலைத்தளம் | www |
கெட்டி வில்லா (Getty Villa) என்பது கெட்டி மையத்தின் இரண்டு வளாகங்களில் ஒன்றாகும். மற்றொன்று ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் ஆகும். இந்த இடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திற்கு அருகாமையில் பசிபிக் பாலிசாடேஸில் உள்ள மாலிபு கடற்கரையின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது.[2] கெட்டி வில்லாவானது பழங்கால கிரீஸ், ரோம் மற்றும் யூட்ருரியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்வி மையமாகவும், அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது. இங்கு 44,000 கிரேக்க, ரோமானிய, மற்றும் யூட்ருசன் பழங்காலச் சின்னங்களைக் கொண்டுள்ளது. அவை கி.மு 6500 முதல் கி.பி 400 ஆம் ஆண்டு வரையிலான காலப் பழமை கொண்டவை. இவற்றில் லான்சுடவ்ன் எராக்லெசு மற்றும் விக்டோரியஸ் யூத் ஆகிய கலைப் படைப்புகளும் உள்ளடங்கும். தொல்பொருள் சார் மற்றும் இன வரலாறு பாதுகாப்பு தொடர்பான கெட்டி தலைமையாளர் திட்ட அலுவலகம் இவ்வளாகத்தினுள் அமைந்துள்ளது. இங்குள்ள தொகுப்புகள் தொடர்பான இணைய வழி மற்றும் ஒலி வழி கெட்டி வழிகாட்டி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
1954 ஆம் ஆண்டில் ஆயில் டைகூன் ஜெ. பவுல் கெட்டி, பசிபிக் கடலோர செங்குத்து மலைத்தொடரில் இருந்த தனது இல்லத்திற்கருகாமையில் ஒரு காட்சியகத்தைத் தொடங்கினார். [3][4][5] அங்கிருந்து வேகமாக வெளியெறி, தனது அசலான மலையுச்சி காட்சியகத்திலிருந்து கீழே உள்ள தனது சொத்தில் இரண்டாவது அருங்காட்சியகத்தை, கெட்டி வில்லாவைக் கட்டினார். [4][6] இந்த வில்லாவினுடைய தோற்றமானது ஹெர்குலியத்தில் அமைந்துள்ள பாபிரி வில்லாவினால் துாண்டுதலினால் அமைக்கப்பட்டதாகும். [6] மேலும், பல புராதன தலங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை எல்லாம் உள்ளடக்கியதாகவும் இருந்தது. இந்த அருங்காட்சியகம் கட்டிடடப் பொறியியல் வல்லுநர்கள் இராபர்ட். இ. லாங்டான் ஜுனியர் மற்றும் எர்னஸ்ட் சி. வில்சன் ஜுனியர் ஆகியோரின் மேற்பார்வையிலும், தொல்பொருளியல் ஆய்வாளர் நார்மன் நியுயர்பர்க் என்பவரின் ஆலோசனைப்படியும் வடிவமைக்கப்பட்டதாகும். [7][8] இந்த அருங்காட்சியகம் 1974 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.[9] 1976 இல் மரணமடைந்த கெட்டியால் இந்த அருங்காட்சியகம் ஒருபோதும் பார்வையிடப்படவில்லை. [5] அவருடைய மரணத்தைத் தொடர்ந்து இந்த அருங்காட்சியகம் $661 மில்லியன் மதிப்பில் மரபுவழிப்பட்டதாக மாற்றப்படும் முயற்சியில் [10] மேலும் விரிவாக்கப்பட்ட வளாகத்தில் விரிவாக்கப்பட திட்டமிடப்பட்டது. கெட்டி மையத்தின் தளத்தின் வளர்ச்சியின் மொத்த அளவைக் குறைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனது புதிய வளாகத் திட்டத்திற்குப் புறம்பான எதிர்ப்பை இந்த அருங்காட்சியகம் வெற்றி கண்டது.[11] அருங்காட்சியகத்தின் மொத்த இடத் தேவைகளை பூர்த்தி செய்ய, இந்த அருங்காட்சியகம், கெட்டி வில்லா கிரேக்க கலாச்சாரம், பண்டைய உரோமன் மற்றும் எட்ருஸ்கன் நாகரிக தொல்பொருட்கள் ஆகியவற்றை இரண்டு இடங்களிலும் பிரித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.[11] 1993 ஆம் ஆண்டில், கெட்டி அறக்கட்டளை ரொடோல்போ மச்சாடோ மற்றும் ஜார்ஜ் சில்வெட்டி ஆகியோரை கெட்டி வில்லா மற்றும் அதன் வளாகத்தை வடிவமைத்து புதுப்பிக்கத் தேர்ந்தெடுத்தது.[11] 1997 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியத்தின் தொகுப்பிலுள்ள பொருட்களில் பகுதியானவை கெட்டி மையத்தில் காட்சிப்படுத்தும் பொருட்டு இடமாற்றம் செய்யப்பட்டன. கெட்டி வில்லாவானது புதுப்பித்தலுக்காக மூடப்பட்டது. [12] புதுப்பித்தலின் போது அருங்காட்சியகத் தொகுப்பு மறுபடி தக்க வைக்கப்பட்டன. [9] 2004 ஆம் ஆண்டு தொடங்கி, அருங்காட்சியகம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம், துருக்கியில் மத்திய கிழக்கின் கலையைப் பாதுகாப்பது தொடர்பான படிப்பை பயிற்றுவிக்கும் கோடை நிறுவனங்களை நடத்தின.[13]
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Visitor Figures 2016" (PDF). The Art Newspaper Review. April 2017. p. 14. பார்க்கப்பட்ட நாள் 23 March 2018.
- ↑ "About the Museum (Getty Museum)". www.getty.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-01-19.
- ↑ Storrie at p. 186.
- ↑ 4.0 4.1 "Architecture". Getty Trust. பார்க்கப்பட்ட நாள் 2011-03-08.
- ↑ 5.0 5.1 Bird, Cricket (June 10, 1976). "Getty Never Saw Fabulous Museum". Lewiston [Maine] Evening Journal: p. 10. https://news.google.com/newspapers?id=soggAAAAIBAJ&sjid=r2UFAAAAIBAJ&pg=3053,1344563&dq=getty+museum&hl=en.
- ↑ 6.0 6.1 Ray, Derek (February 11, 2011). "The Getty Center and the Getty Villa". San Diego Reader. http://www.sandiegoreader.com/news/2011/feb/11/travel-getty-center-and-getty-villa/.
- ↑ Myrna Oliver, Robert Langdon Jr., 86; Designed 1st Getty Museum, The Los Angeles Times, August 25, 2004
- ↑ Grad student unearths architect’s drawings for Getty exhibition, USC School of Architecture: School News, July 05, 2013
- ↑ 9.0 9.1 Moltesen at p. 155.
- ↑ Lenzner, Robert. The great Getty: the life and loves of J. Paul Getty, richest man in the world. New York: Crown Publishers, 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-56222-7
- ↑ 11.0 11.1 11.2 Filler at 215.
- ↑ Schultz, Patricia (2003). One thousand places to see before you die. Workman Publishing. p. 575. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0761104841. Archived from the original on 2022-04-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "UCLA and Getty Museum Hold Summer Institute in Turkey". UCLA. 2004-09-23. Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2010-12-30.