கூ நேம்ட் இட்?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூ நேம்ட் இட்? (Who named it?) என்பது மருத்துவக் கண்டுபிடிப்புகளில் அதனைக் கண்டுபிடித்தவரின் அல்லது முன்மொழிந்தவரின் பெயரால் அழைக்கப்படும் சொற்களைக் கொண்ட இணைய அகரமுதலி. இந்த இணையம் அவற்றிற்கான அகரமுதலியைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, வாட்டரின் குடுவையம் எனும் உடற்கூற்றியல் அமைப்பு ஆபிரகாம் வாட்டர் (1684–1751) எனும் செருமானிய உடற்கூற்றியியலாளரால் விவரிக்கப்பட்டது. இந்த அமைப்புக்குரிய தனித்துவ பக்கம் ஒன்று உள்ளது[1], மேலும் கண்டுபிடித்தவரின் பக்கமும் உள்ளது.[2] இப்பக்கத்தில் அவரது வேறு கண்டுபிடிப்புகள், அவரது சிறு வாழ்க்கைக் குறிப்பு என்பன உள்ளன. விக்கிபீடியாவின் மருத்துவக் கட்டுரைகளில் மேற்கோள்களுக்கு இந்த இணையம் பயன்படுத்தப்படுகின்றது.[3]

வெளி இணைப்புக்கள்[தொகு]

  1. http://www.whonamedit.com/synd.cfm/3095.html
  2. http://www.whonamedit.com/doctor.cfm/2603.html
  3. விக்கியில் இதற்குரிய வார்ப்புரு "{{WhoNamedIt}}" ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூ_நேம்ட்_இட்%3F&oldid=2746844" இலிருந்து மீள்விக்கப்பட்டது