கூத்தூர் தருமபுரீசுவரர் கோயில்
Appearance
கூத்தூர் தருமபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 11 கிமீ தொலைவில் உள்ளது. [1]
இறைவன், இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் தருமபுரீசுவரர், இறைவி தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி. தருமன் இத்தலத்தில் உள்ள லிங்கத்திருமேனியை நிறுவி தன்னுடைய உடன்பிறந்தாரோடு வழிபட்டதால் மூலவர் தருமபுரீசுவரர் என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர்.[1]
அமைப்பு
[தொகு]மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளே குளம் உள்ளது. அம்மன் சன்னதி தனியாக உள்ளது. தல மரமாக வில்வ மரம் காணப்படுகிறது. [1]