கூட்டு மதிநுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டு மதிநுட்பம் என்பது பல முக வரையறைகளைக் கொண்டது. மாசாச்சூசெட்சு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கூட்டு மதிநுட்ப ஆய்வுப் பிரிவு கூட்டு மதிநுட்பத்தை பின்வருமாறு வரையறை செய்கிறது. கூட்டு என்றால் நபர்கள், கணினிகள், அமைப்புகள் எனப் பல்வேறு கூறுகள் சேர்ந்த ஒரு குழு. மதிநுட்பம் என்பது அந்தக் குழுவின் கூட்டுச் செயற்பாடுகள் உணர்தல், கற்றல், முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல் போன்ற பண்பியல்புகளைக் கொண்டிருத்தல் ஆகும்.

சமூகத்தின் பல செயல்பாடுகள் கூட்டு மதிநுட்பத்தில்தான் தங்கி இருக்கின்றன. கட்டிடம் கட்டுவது, திரைப்படம் தயாரிப்பது, நாட்டை நிர்வாகிப்பது போன்ற செயல்பாடுகள் கூட்டு மதிநுட்பத்தின் மூலமே சாத்தியமாகின்றன. சமூகத் தளத்தில் கூட்டு மதிநுட்பம் தானாக உருவாகுவதாகவோ அல்லது இயங்குவதாக கருத முடியாது. மனிதர்கள் கூட்டாக இணைந்து ஒரு குறிக்கோளுக்காக கூட்டு மதிநுட்பத்தை ஆக்கி, சமூகமாக பராமரித்து, விரிவாக்கி, பயன்பெறுகின்றார்கள். ஒரு கூட்டு மதிநுட்பத்தை சார்ந்த சமூகம் தேக்கமடையும் பொழுது அல்லது கலையும் பொழுது அந்த கூட்டு மதிநுட்பமும் அழிந்துபோகும். எடுத்துக்காட்டாக முன்னர் சிறப்புற்றிருந்து பின்னர் அழிந்த நாகரீகங்ளைச் சுட்டலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_மதிநுட்பம்&oldid=1522496" இலிருந்து மீள்விக்கப்பட்டது