கூட்டு நுகர்வு
கூட்டு நுகர்வு என்பது தற்போது சில தளங்களில் விரிவாகி வரும் ஒரு பொருளாதார மாதிரி ஆகும். பகிர்தல், கைமாறுதல், பண்டமாற்று, வாடகை போன்ற வழிமுறைகளில் நுகர்தல் கூட்டு நுகர்வு ஆகும். தனியே ஒருவர் ஒரு பொருளை வாங்கி நுகராமல், பொருட்களைப் பகிர்வது (நூல்கள், இசைத்தட்டுகள்), கைமாறுவது (கருவிகள், உழைப்பு), பண்டமாற்றுவது (உடைகள், சேவைகள்), வாடகைக்கு எடுப்பது (தானுந்து, ஓய்வு விடுதிகள்) கூட்டு நுகர்வு ஆகும். தற்போது வளர்ச்சி பெற்று வரும் சமூக ஊடகங்களாலும், peer-to-peer முறைமைகளாலும் இது சாத்தியமாகி உள்ளது.