கூட்டு நுகர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டு நுகர்வு என்பது தற்போது சில தளங்களில் விரிவாகி வரும் ஒரு பொருளாதார மாதிரி ஆகும். பகிர்தல், கைமாறுதல், பண்டமாற்று, வாடகை போன்ற வழிமுறைகளில் நுகர்தல் கூட்டு நுகர்வு ஆகும். தனியே ஒருவர் ஒரு பொருளை வாங்கி நுகராமல், பொருட்களைப் பகிர்வது (நூல்கள், இசைத்தட்டுகள்), கைமாறுவது (கருவிகள், உழைப்பு), பண்டமாற்றுவது (உடைகள், சேவைகள்), வாடகைக்கு எடுப்பது (தானுந்து, ஓய்வு விடுதிகள்) கூட்டு நுகர்வு ஆகும். தற்போது வளர்ச்சி பெற்று வரும் சமூக ஊடகங்களாலும், peer-to-peer முறைமைகளாலும் இது சாத்தியமாகி உள்ளது.[1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "What Is the Sharing Economy?". Dotdash Meredith. November 10, 2021. https://www.thebalancemoney.com/what-is-the-sharing-economy-5188892. 
  2. David, Matthew (2017). "Sharing: post-scarcity beyond capitalism?". Cambridge Journal of Regions, Economy and Society 10 (2): 311–325. doi:10.1093/cjres/rsx003. 
  3. Daglis, Theodoros (2022). "Sharing Economy". Encyclopedia 2 (3): 1322–1332. doi:10.3390/encyclopedia2030088. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_நுகர்வு&oldid=3893602" இலிருந்து மீள்விக்கப்பட்டது