கூடல் (சொல்விளக்கம்)
Jump to navigation
Jump to search
கூடல் என்னும் சொல் கூடு என்னும் வினைச்சொல்லிலிருந்து உருவான பெயர்ச்சொல்.
ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதலையும், [1]
பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதலையும்,
ஆறுகள், வழித்தடங்கள், தெருக்கள் முதலானவை ஒன்றுகூடுதலையும்,
கூடுபோல் அடுக்கு மாடிகள் உயரமாகிக் கூடுதலையும் உணர்த்தும்.
கூடல் விளையாட்டும் இங்கு எண்ணத்தக்கது.
மதுரை மாநகரைப் பழங்காலத்தில் கூடல் என்னும் பெயராலும் வழங்கிவந்தனர். இது பல ஊர் மக்கள் பெருமளவில் கூடுமிடமாய் விளங்கியதாலும், பல வழித்தடங்கள் கூடுமிடமாய் விளங்கியதாலும், பன்மாடக் கூடங்கள் பலவற்றைப் பெற்று விளங்கியதாலும் பெற்ற பெயர்.
மூன்று ஆறுகள் ஒன்று கூடும் இடத்திலுள்ள ஊர் திருமுக்கூடல்
கண்கூடுவரி என்பது மாதவி ஆடிய ஆட்டங்களில் ஒன்று.
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
கூட்டல் , கூடல் , பாங்கின் கூட்டல்,
வேட்டல் , என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி.