கூசு மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூசு மலை

கூசு மலை (Kusu Hill) என்னும் மலை தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் அருகில் உள்ளது.[1] இதன் மேல்பாகம் செங்குத்தாக அதாவது கூராக இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதன் மேல் ஏறுவது மிக கடினமாக இருந்தாலும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது இளைஞர்கள் ஏறி விளக்கு ஏற்றுகின்றார்கள். இதன் அடிவாரத்தில் இயற்கை அழகுடன் முனீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை, வைகாசி மாதங்களில் பாரதக் கூத்து நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூசு_மலை&oldid=2548520" இருந்து மீள்விக்கப்பட்டது