கு. பழனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கு. பழனி (K. Palani) ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பிரானார்.[1] இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் செல்வ பெருந்தகையை விட 10,216 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவர் இவரது தந்தையார் குமாரசாமி ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரணிபுதூரில் வசித்தார். இவர் முன்னதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குன்றத்தூர் ஒன்றியத்தின் செயலாளராகவும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "15 Assembly Members". Tamil Nadu Government. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2016 ஸ்ரீபெரும்புதூர்(தனி) சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்". Tamil.Oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பழனி&oldid=3943414" இலிருந்து மீள்விக்கப்பட்டது