உள்ளடக்கத்துக்குச் செல்

குழுமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழுமூர் சங்ககாலத்தில் பெயர்பெற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. அது மலைச்சாரலில் அமைந்திருந்தது. பசுக்கூட்டம் அங்கு மேயும்.

இவ்வூரில் இருந்த வள்ளல் உதியன். உதியன் என்னும் பெயர் சேர மன்னனை நினவூட்டுகிறது. எனவே இந்த ஊர் சேரநாட்டுப் பகுதியில் இருந்தது எனத் தெரிகிறது.

உதியன் மடம் கட்டி அன்னதானம் செய்துவந்தான். அது 'உதியன் அட்டில்' என்று பெயரபெற்றிருந்தது. அதில் உணவு உண்போரின் ஒலி இரவு பகல் எந்த நேதர்ரிலும் கேட்டுக்கொண்டே இருக்குமாம். இந்த அட்டிலில் மக்கள் ஒலி கேட்பது போலத் தலைவன் தலைவியை நாடி வரும் வழியிலுள்ள அருவியின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்குமாம். (கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் -அகம் 168)

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழுமூர்&oldid=687239" இலிருந்து மீள்விக்கப்பட்டது