குல்னா கோட்ட அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | 1998 |
---|---|
அமைவிடம் | சிப் பாரி மோர், குல்னா, வங்காளதேசம் |
குல்னா கோட்ட அருங்காட்சியகம் (Khulna Divisional Museum) வங்காள தேசத்தின் குல்னா நகரத்தில் அமைந்துள்ள]] அருங்காட்சியகம் ஆகும். வங்கதேச தொல்பொருள் துறை அருங்காட்சியகத்தை நிறுவியது. வங்கதேசத்தில் பரப்பளவில் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாக உள்ளது. வங்காள தேசிய அருங்காட்சியகம் பரப்பளவில் பெரிய அருங்காட்சியகமாக முதல் இடத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் தெற்கு வங்கத்தின் தொல்பொருள் சான்றுகள், கட்டமைப்புகள் மற்றும் புகைப்படங்கள் இங்கு நிறைந்துள்ளன. பாரத ராசாவின் இராச்சியம் தொடர்பான பாரத பயானா தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் எச்சங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பாரத் ராசர் தியூல் என்ற தளத்தில் செங்கலால் கட்டப்பட்ட கட்டமைப்பின் கணிசமான இடிபாடுகள் இங்கு உள்ளன. ஆண் உருவங்கள், இந்து கடவுள், தேவி அமைப்பு, ஆரம்ப, இடைக்கால மட்பாண்டங்கள் போன்ற சில மார்பளவு உருவங்களையும் இங்கு காணலாம். தரை வடிவமைப்பு அடிப்படையில் இவை கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பேரரசர் சகாங்கிரின் காலத்திலிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [1] [2]
சிறப்பு அம்சங்கள்
[தொகு]குல்னா கோட்ட அருங்காட்சியகம் தெற்கு வங்கத்தின் தொல்பொருள் சான்றுகள், கட்டமைப்புகள் மற்றும் புகைப்படங்கள் நிறைந்ததாகும். பரத பயானத்திலிருந்து தொல்பொருள் எச்சங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "খুলনা বিভাগীয় জাদুঘর". banglanews24.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ "খুলনা বিভাগীয় জাদুঘর". ভ্রমণ গাইড (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.