குலாம் சுக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாம் சுக்ராவின் உருவப்படம்

குலாம் சுக்ரா (Ghulam Sughra) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் ஆவார். 1970 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். [1][2]

வாழ்க்கை.[தொகு]

சுக்ரா பன்னிரண்டு வயதாக இருந்தபோது கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது கிராமத்தில் விவாகரத்து பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்புக்கு ஆளானார். [3] பள்ளிக்குச் செல்ல முயன்றபோது இவருடைய சகோதரர்களாலும் தாக்கப்பட்டார். இதனால் இவர் வீட்டில் இருந்தே படித்தார். தனது கிராமத்தின் முதல் பெண் உயர்நிலைப் பள்ளி பட்டதாரியாகவும் சிறுமிகளுக்கான பள்ளியில் முதல் ஆசிரியராகவும் புகழ் பெற்றார் [4] கற்பிப்பதற்காக பெண்கள் தனது நாட்டில் இல்லை என்பதை கண்டுபிடித்தார். பண்பாடு ஒரு காரணம் என்றாலும் வறுமையே இதற்கான முக்கிய காரணம் என்பது இவர் நம்பிக்கையாக இருந்தது. எனவே வறுமையை ஒழிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க குலாம் சுக்ரா முயன்றார் [3]

பாக்கித்தானில் உள்ள மார்வி கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக குலாம் சுக்ரா இருந்தார். இவ்வமைப்பு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும், இதன் நோக்கம் பெண்களிடையே சமூக சேமிப்பு நிதிகளை உருவாக்குவதும் மனித உரிமைகள், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.[2]

சாதனைகள்[தொகு]

1999 ஆம் ஆண்டில் அசோகா உறுப்பினர் தகுதியை வென்ற முதல் பாக்கித்தான் பெண் என்ற சிறப்புக்கு உரியவராக ஆனார், 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டு துணிச்சல் விருதைப் பெற்றார்.[5][2][6][7] முன்னாள் அமெரிக்க வெளியுறவு மந்திரி இலாரி கிளிண்டன் மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா ஆகியோர் இவ்விருதை குலாம் சுக்ராவிற்கு வழங்கினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghulam Sughra Solangi  a woman of courage, dailytimes Pakistani, Published by Salman Ali on AUGUST 25, 2017.
  2. 2.0 2.1 2.2 "Secretary Clinton To Host the 2011 International Women of Courage Awards". U.S. Department of State. பார்க்கப்பட்ட நாள் 27 November 2014.
  3. 3.0 3.1 Ghulam Sughra பரணிடப்பட்டது சனவரி 27, 2012 at the வந்தவழி இயந்திரம், Ashoka.org, Retrieved 16 July 2016
  4. "Events 2011 - Embassy of the United States Islamabad, Pakistan". Islamabad.usembassy.gov. Archived from the original on 5 December 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2014.
  5. Ahmed, Shahzada Irfan. "MORE POWER TO HER". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
  6. "Education key to changing women's lot". Archived from the original on December 5, 2014. பார்க்கப்பட்ட நாள் September 5, 2014.
  7. "Secretary Clinton To Host the 2011 International Women of Courage Awards". 30 June 2011. Archived from the original on 25 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_சுக்ரா&oldid=3918104" இலிருந்து மீள்விக்கப்பட்டது