குர்ஷீத் ஜா தேவ்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குர்ஷீத் ஜா தேவ்தி
Khursheed Jah Devdi palace in Hussaini Alam, Hyderabad (2).jpg
அமைவிடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா

குர்ஷீத் ஜா தேவ்தி (Khursheed Jah Devdi) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரில் அமைந்துள்ள ஒரு ஐரோப்பிய கட்டடக்கலை பாணியிலான அரண்மனையாகும். இது பைகா வம்ச பிரபுவான குர்ஷீத் ஜா பகதூரின் மூதாதையர்களால் கட்டப்பட்டது.[1] இதன் உட்புறங்கள் ஒரு காலத்தில் விலையுயர்ந்த தரைவிரிப்புகள் மற்றும் பிரத்தியேக சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நீரூற்றுகளும் பூக்கள் பூத்த தோட்டங்களும் சுற்றுப்புறத்தை உயிரோட்டமாக வைத்திருந்தன. இது வரலாற்று சிறப்புமிக்க சார்மினாரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உசேனி ஆலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பாரம்பரிய ஆர்வலர்களால் இந்த அரண்மனையை மீட்டெடுக்க பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஒரு காலத்தில் பைகா பிரபுக்களின் இல்லமாக இருந்த குர்ஷீத் ஜா தேவ்தி இப்போது இடிந்து கிடக்கிறது. [2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்ஷீத்_ஜா_தேவ்தி&oldid=3147048" இருந்து மீள்விக்கப்பட்டது