குருதிநிணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹீமோசயனின் காரணமாக கருநீல நிறத்தில் இருக்கும் நண்டு உடலின் அடிப்பகுதி

குருதிநிணம் (hemolymph) என்பது சில கணுக்காலிகளின் உடலில் காணப்படும் குருதி மற்றும் திசுவிடைத் திரவத்திற்கு இணையான ஒரு நீர்மம். பெரும்பாலும் குருதிநிணத்திற்கு என்று தனியாக குழாய்கள் எதுவும் கிடையாது. விலங்கின் உடற்குழி முழுதிலும் குருதி நிணம் நிறைந்திருக்கும். எல்லா செல்களும் குருதி நிணத்தால் சூழப்பட்டிருக்கும். குருதிநிணத்தில் உயிர்வளியைச் சுமந்து செல்லும் ஹீமோசயனின் என்ற நிறமி இருக்கும். தாமிரத்தைத் தன்னகத்தே கொண்ட இந்த நிறமி உயிர்வளியேற்றம் அடைந்த நிலையில் நீல நிறத்துடனும் உயிர்வளியில்லா நிலையில் நிறமற்றும் காணப்படும்.

சில சிற்றினங்கள் எதிரியால் தாக்கப்படும் போது குருதிநிணத்தைச் சிந்தி எதிரிகளைக் குழப்பமடையச் செய்து தங்களைக் காத்துக் கொள்கின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிநிணம்&oldid=3336295" இலிருந்து மீள்விக்கப்பட்டது