குருட்டுத்தன்மை தடுப்புக்கான பன்னாட்டு நிறுவனம்

ஆள்கூறுகள்: 48°50′44″N 2°18′23″E / 48.8455°N 2.3063°E / 48.8455; 2.3063
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருட்டுத்தன்மை தடுப்புக்கான பன்னாட்டு நிறுவனம்
The International Agency for the Prevention of Blindness (IAPB)
உருவாக்கம்1975; 49 ஆண்டுகளுக்கு முன்னர் (1975)
வகைஅரசு சார்பற்ற அமைப்பு
நோக்கம்உலகம் முழுவதும் பார்வைக் குறைபாட்டினை தடுத்தல்
தலைமையகம்
ஆள்கூறுகள்48°50′44″N 2°18′23″E / 48.8455°N 2.3063°E / 48.8455; 2.3063
ஆட்சி மொழி
ஆங்கிலம்
பீட்டர் கோலந்து
வலைத்தளம்iapb.org

குருட்டுத்தன்மை தடுப்புக்கான பன்னாட்டு நிறுவனம் (The International Agency for the Prevention of Blindness) 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பன்னாட்டுக் கூட்டமைப்பாகும்.[1] இக்கூட்டமைப்பில் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுச் சமூகம், பெருநிறுவனங்கள், தொழில்முறை அமைப்புகள் மற்றும் பார்வைக் குறைபாட்டினைத் தடுப்பதில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகும்.[2] இந்த நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் கீழ் பணியாற்றும் கூட்டமைப்பாகும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Community Eye Health Journal » International Agency for the Prevention of Blindness". www.cehjournal.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
  2. "The International Agency for the Prevention of Blindness (IAPB)".
  3. "WHO | International Agency for the Prevention of Blindness (IAPB)". WHO. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
  4. "World Health Organization".