குராதுலைன் பக்தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குராதுலைன் பக்தேரி (Quratulain Bakhteari) ஒரு பாக்கித்தான் சமூக தொழில்முனைவோர் மற்றும் சமூக அமைப்பாளர் ஆவார் ,இவர் மேம்பாட்டு ஆய்வுகள் மற்றும் நடைமுறைகளுக்கான நிறுவனத்தை நிறுவினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

குராத்துலின் பக்தேரி டிசம்பர் 25, 1949 அன்று பாக்கித்தானின் கராச்சியில் ஒரு அகதி குடியிருப்பில் பிறந்தார். இவர் புனித ஆக்னசு தொடக்கப் பள்ளியில் பயின்றார், பின்னர் பெண்கள் PECHS உயர்நிலைப் பள்ளி,புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை வகுப்பினைப் பயின்றார். இவர் தனது வாழ்க்கையின் முதல் 22 ஆண்டுகளை இந்த முகாமில் கழித்தார். தனது 16 ஆம் வயதில் ஒரு பல் மருத்துவரை மணந்தார். இவர் கராச்சி பல்கலைக்கழகத்தில், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1] 1987 இல் இங்கிலாந்தில் உள்ள லாக்பரோ பல்கலைக்கழகத்தில் சமூக மேம்பாட்டில் முனைவர் பட்டம் பெற்றார். [2]

தொழில்முறை வாழ்க்கை[தொகு]

முனைவர் பக்தேரி, வடக்கு கராச்சியில் உள்ள ஓராங்கி என்ற குடிசையில் 1971 ஆம் ஆண்டில் தனது பணியினைத் தொடங்கினார். 1978 முதல் 1982 வரை, இளங்கலை பட்டப்படிப்பை முடித்தபோது, முனைவர் பக்தேரி கராச்சியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் விருப்ப ஆர்வலர், ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக அமைப்பாளராக பணியாற்றினார், பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை ஆகியன இவரது பணிகளில் மையமாக இருந்தது. இந்த நேரத்தில் இவர் கிழக்கு பாக்கித்தானில் இருந்து புதிதாக வந்த அகதிகளுக்கு உதவினார், தற்போது இது வங்காளதேசப் பகுதிகளில் உள்ளது.இவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி அணுகலை வழங்கினார். பக்தேரி ஓரங்கியில் உள்ள கழிவுநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தினார், இதில் ஓராங்கி எனும் சோதனைத் திட்டத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார். [3] [4] அகதிகளாக வளர்ந்து வரும் அனுபவங்கள்தான் தனது தொழிலைத் தேர்ந்தெடுத்ததாக இவர் கூறியுள்ளார். [5]

ஓரங்கி சோதனைத் திட்ட மாதிரியை குவெட்டாவுக்குக் கொண்டுவர, பலூசிஸ்தான் (பாக்கித்தான்) மாகாண அரசாங்கத்தால் பக்தேரி அழைக்கப்பட்டார். [6] முனைவர் பக்தேரி 1980 களில் பலூசிஸ்தானில் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். 5 வருட இடைவெளியில் பெண்களுக்கு 2200 சமூக ஆதரவு பள்ளிகளை நிறுவினார். அதில் 300,000 பெண்கள் சேர்க்கையுடன் பெண் கல்வி வழங்குவதற்கான சமூக ஆதரவு செயல்முறை என்ற கருத்தை இவர் உருவாக்கி வழிநடத்தினார். [7]

பக்தேரி ஹோம்நெட் தெற்காசியாவின் குழுவில் பணியாற்றுகிறார். [8]

மேம்பாட்டு ஆய்வுகள் மற்றும் நடைமுறைகளுக்கான நிறுவனம்[தொகு]

1998 ஆம் ஆண்டில், கல்வியில் தனது பணியைத் தொடர்ந்து, முனைவர் குராதுலைன் பக்தீரியின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். குராதுலைன், உள்ளூர் மற்றும் அரசு அல்லது கல்வி புரவலர்களிடம் மூலம் செயல்பட வடிவமைக்கப்பட்ட ஒரு மேம்பாட்டு மற்றும் பயிற்சி நிறுவனத்தை (ஐடிஎஸ்பி) நிறுவினார். இந்த பள்ளி ஒரு அடிப்படை கல்வியை வழங்குவதோடு சமூக மேம்பாடு, அமைப்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியினை முதன்மையாகக் கொண்டுள்ளது. [9] இந்த நிறுவனம் பாக்கித்தான் முழுவதும் கற்றல் நிலையங்களை நிறுவியது, இது பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இவர்களின் சமூகங்களுக்குச் சென்று சேவை செய்ய பயிற்சி அளிக்கிறது. தற்போது முறைசாரா பள்ளி மற்றும் பட்டமில்லா விருது வழங்கி வருகிறது, இருப்பினும் ஐடிஎஸ்பி இதே கருத்தின் அடிப்படையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது, குவெட்டாவில் ஒரு பாடத்திட்டம் மற்றும் அதற்கான வளாகத்தையும் உருவாக்குகிறது. [10]

சான்றுகள்[தொகு]

  1. "Quratul Ain Bakhteari". Skoll Foundation. Skoll Foundation. 26 April 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Are all Pakistani women damsels in distress?". https://tribune.com.pk/article/24645/are-all-pakistani-women-damsels-in-distress. 
  3. "QURATULAIN BAKHTEARI". https://wellbeing-project.org/quratulain-bakhteari/. 
  4. "The Chronic Optimist Quratulain Bakhteari Has Inspired Change for Generations to Come". http://hellopakistanmag.com/hello-pakistan/quratulainbakhteari/. 
  5. "The Chronic Optimist Quratulain Bakhteari Has Inspired Change for Generations to Come". http://hellopakistanmag.com/hello-pakistan/quratulainbakhteari/. 
  6. "The Chronic Optimist Quratulain Bakhteari Has Inspired Change for Generations to Come". HELLO! Pakistan. HELLO! Pakistan. 11 March 2017. http://hellopakistanmag.com/hello-pakistan/quratulainbakhteari/. 
  7. "Dr. Quratulain Bakhteari". HomeNet South Asia. HNSA. 13 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Dr. Quratulain Bakhteari". HomeNet South Asia. HNSA. 13 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
  9. Alvarez Marcos, Carmen. "QURATULAIN BAKHTEARI". The Wellbeing Project. The Wellbeing Project. https://wellbeing-project.org/quratulain-bakhteari/. 
  10. Ward, Ellie. "The Ashoka System Changers #3: Qurat-Ul-Ain Bakhtiari". Pioneers Post. Pioneers Post. https://www.pioneerspost.com/videos/20150522/the-ashoka-system-changers-3-qurat-ul-ain-bakhtiari. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குராதுலைன்_பக்தேரி&oldid=3279432" இருந்து மீள்விக்கப்பட்டது