குமுதம் தீராநதி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமுதம் தீராநதி
குமுதம் தீராநதி
குமுதம் தீராநதி
வகைஇலக்கியம்
வெளியீட்டாளர்குமுதம் குழுமம்
நிறுவனம்குமுதம் பப்ளிகேசன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்http://www.kumudam.com

தீராநதி குமுதம் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரால் 2002 ஆம் ஆண்டு முதல் தீவிர இலக்கியத்துக்கான மாத இதழாக வெளியிடப்படுகிறது. கவிதை, சிறுகதை, நூல்விமர்சனம், பல்துறை சார்ந்தவர்களுடனான நேர்காணல் ஆகிய அம்சங்களை இவ்விதழ் உள்ளடக்குகின்றது. முந்திய தலைமுறை இலக்கியவாதிகள், இலக்கியச் சஞ்சிகைகள் அறிமுகம் செய்யப்படுவதுடன், சினிமா மற்றும் நாடகம் தொடர்பான கட்டுரைகளும் அவ்வப்போது இடம்பெறுகின்றன. மேலும் தமிழக ஓவியர்களின் அறிமுகக் குறிப்புகளும், அவர்களது ஓவியங்களும் வெளியிடப்படுகின்றன.