குமாரி தேவி
குமாரி | |
---|---|
2011ல் லலித்பூரின் குமாரி ஊர்வலம், நேபாளம் | |
எழுத்து முறை | कुमारी |
சமயம் | இந்து சமயம் |
குமாரி அல்லது குமாரி தேவி அல்லது வாழும் தெய்வம், நேபாள நாட்டில் நேவார் சமூகத்திலிருந்து பருவத்திற்கு வராத 6 வயது கன்னிப் பெண்ணை தேர்வு செய்து, துர்கையாக வழிபடும் மரபு தொன்று தொட்டு உள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கும் கன்னிப் பெண்ணை கோயிலில் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். குமாரி தேவி வயதிற்கு வந்ததும், வேறு கன்னிப் பெண்ணை குமாரியாக தேர்வு செய்கின்றனர்.
நேபாள நாட்டில் பல நகரங்களில் குமாரிகள் இருந்தாலும், காட்மாண்டுவின் தெய்வீக குமாரி மிகவும் பிரபலமானது. மேலும் அவர் காத்மாண்டு நகரின் மையத்தில் உள்ள குமாரி அரண்மனையில் வசிக்கிறார். குமாரி தேவியை தேர்வு செயல்முறை கடுமையானது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, காத்மாண்டு நகரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து வயது தெய்வீக குமாரி திரிஷ்னா சக்யா, செப்டம்பர் 2017ல் தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 2014ல் லலித்பூர் நகரத்தின் குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட யுனிகா பஜ்ராச்சார்யா, வாழும் இரண்டாவது மிக முக்கியமான பெண் தெய்வம் ஆவார்.[1][2]
காத்மாண்டு பள்ளத்தாக்க்கில் குமாரி தேவி வழிபாடு, துர்கா தேவியின் வெளிப்பாடான தலேஜுவின் அவதாரம் என்று நம்பப்படுகிறது.[3] தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரி தேவியின் முதல் மாதவிடாய் தொடங்கும் போது, துர்கை அவளது உடலை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது. மேலும் கடுமையான நோய் அல்லது காயத்தால் ஏற்படும் இரத்த இழப்பு குமாரி தேவிக்கு தெய்வீக இழப்பை ஏற்படுத்துகிறது.
குமாரி தேவி பாரம்பரியம் நேபாளத்தின் சில நகரங்களில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. அவைகள்: காட்மாண்டு, லலித்பூர், பக்தபூர், சங்கு மற்றும் புங்கமதி நகரங்கள் ஆகும். [4][5] குமாரி தேவியின் தேர்வு முறை வெவ்வேறு நகரங்களுக்கு இடையே வேறுபடுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bell, Thomas (3 November 2006). "Goddess status may violate girls' rights, says court". The Telegraph (UK). https://www.telegraph.co.uk/news/worldnews/1533196/Goddess-status-may-violate-girls-rights-says-court.html.
- ↑ "Living Goddesses of Nepal – Photo Gallery". Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
- ↑ Patron Deity: Taleju Bhawani by Shivendra Thapa, ECS NEPAL, Issue 47, Aug 2010, retrieved 16 December 2020
- ↑ Jamuna, Bajracharya (2020-10-07). "Becoming a Kumari was a dream come true". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
- ↑ Murr, Michael. "Michaels WebSite". www.michael-murr.de (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.