குமரகுருபரன் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரகுருபரன்
பிறப்பு1974
திருநெல்வேலி, தமிழ்நாடுhu
இறப்பு19 சூன் 2016 (அகவை 41–42)
சென்னை
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுகவிஞர்
விருதுகள்தமிழ் இலக்கியத் தோட்ட விருது (2015)

குமரகுருபரன் (1974 - சூன் 19, 2016) தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குமுதம், தினமலர், விண்நாயகம் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.[1] கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் இவரது மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்ற நூலுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கவிதைப் பரிசை வழங்கிக் கௌரவித்தது.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

குமரகுருபரன் தமிழ்நாடு, திருநெல்வேலியில் 1974 இல் பிறந்தவர்.[3] கால்நடை மருத்துவம் படித்தவர்.[4] அந்திமழை என்ற இதழுக்காக ஆனந்த விகடனின் சிறந்த மாணவ ஆசிரியர் என்ற விருதைப் பெற்றார்.[3] இதழியலில் ஏற்பட்ட ஆர்வத்தால்,[4] குமுதம், விண்நாயகன், தினமலர் ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.[3]

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • ஞானம் நுரைக்கும் போத்தல் (கவிதைகள், 2014)
  • மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது (கவிதைகள்)[5]
  • இன்னொருவனின் கனவு (கட்டுரைத் தொகுப்பு)
  • பயணிகள் கவனிக்கவும் (பயண நூல்)

விருதுகள்[தொகு]

  • சிறந்த கவிதை நூலுக்கான தமிழ் இலக்கியத் தோட்ட விருது.[2]
  • சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான 2015 ராஜமார்த்தாண்டன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது,[6] ஆனால் குமரகுருபரன் அதனை வாங்க மறுத்து விட்டார்.[1]

மறைவு[தொகு]

குமரகுருபரன் தனது 42வது அகவையில் 2016 சூன் 19 அன்று அதிகாலையில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "கவிஞர் குமரகுருபரன் மறைவு". பத்திரிகை.காம். பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  2. 2.0 2.1 "விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்". தி இந்து தமிழ். 19 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  3. 3.0 3.1 3.2 "இயல் விருது விழா 2015" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2014.
  4. 4.0 4.1 "குமரகுருபரன் அஞ்சலி". பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  5. "குமரகுருபரன் எழுதிய 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' கவிதை நூலின் வெளியீட்டு விழா - shruti.tv". shruti.tv. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  6. "குமரகுருபரனுக்கு ராஜமார்த்தாண்டன் விருது". பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரகுருபரன்_(கவிஞர்)&oldid=2411499" இலிருந்து மீள்விக்கப்பட்டது