குத்தாலம் பி. கல்யாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குத்தாலம் பி.கல்யாணம் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தி.மு.க வின் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆவார்.[1] இவர் 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டவர். இவர் நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்துள்ளார்.[2] 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், குத்தாலம் தொகுதியிலிருந்து, தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3] இவருக்கு 2018ஆம் ஆண்டு திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் விருது வழங்கப்பட்டது. .[4] இவரது மகன் குத்தாலம் க. அன்பழகனும் 1996ல் குத்தாலம் தொகுதியிலிருந்து, தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் திமுக கொள்கை பரப்புகுழு துணைச் செயலாளராக உள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேர்தல் பணி சரிவர செய்யாத தேனி மாவட்ட திமுக செயலாளர் நீக்கம் : கட்சி தலைமை அதிரடி". பார்த்த நாள் 5 ஆகத்து 2016.
  2. "மாவட்டக் கழகச் செயலாளர்கள்". மூல முகவரியிலிருந்து 2015-07-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 ஆகத்து 2015.
  3. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 1996". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. மூல முகவரியிலிருந்து 2013-04-02 அன்று பரணிடப்பட்டது.
  4. "விழுப்புரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா". பார்த்த நாள் 16 செப்டம்பர் 2018.
  5. "கொள்கை பரப்புச் செயலாளர்கள் குழு". மூல முகவரியிலிருந்து 2015-07-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 ஆகத்து 2015.