உள்ளடக்கத்துக்குச் செல்

குதிரைக் கொட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டில் என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் வேளாண்மைக் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது கால்நடை மற்றும் குதிரை முதலான விலங்கு வளர்ப்பு, கருவிகள், தீவனம் ஆகியவற்றை பராமரிக்கும் இடமாகும்.[1] மக்களை தங்கவைக்கும் இடமும் கொட்டில் எனும் பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இதன் அடிப்படையில் கொட்டில் எனும் சொல், புகையிலை கொட்டில், பசு மாட்டுக் கொட்டில், ஆட்டுக் கொட்டில், என வழங்கப்படுகின்றது.

குதிரைக் கொட்டில் அல்லது குதிரைக் கொட்டடி அல்லது குதிரை இலாயம் (stable) கால்நடைகளைக் குறிப்பாக குதிரைகளைக் கட்டிவைக்கும் கட்டிடமாகும். இக்கட்டிடத்தில் ஒவ்வொரு விலங்குக்குமான தனிக் கொட்டகைகள் இருக்கும். இன்றளவில் பலவகையான குதிரைக் கோட்டில்கள் வழக்கில் உள்ளன; அமெரிக்கவகைக் கொட்டில்(barn) என்பது இருபுறமும் திறந்த கதவுகள் அமைந்த பெரிய கொட்டில் ஆகும். அதில் ஒவ்வொரு உறுப்படிக்கும் தனிக் கொட்டகை அமைந்திருக்கும். இச்சொல் தனி உரிமையாளரிடம் உள்ள கால்நடைகளைக் கட்டிவைக்கும் இடத்துக்கும் வழங்கலாம். குதிரைக் கொட்டில் உள்ள கட்டிடம் பண்ணையிலோ வீட்டிலோ அமையலாம்.

காலநிலை, கட்டுபொருள், வரலாற்றுக் காலம், கட்டிடக்கலைப் பண்பாட்டு வகை ஆகியவற்றைப் பொறுத்து குதிரைக் கொட்டிலின் புறவடிவமைப்பு பெரிதும் வேறுபடுகிறது. செங்கல், கல், மரம், எஃகு போன்ற பலவகைக் கட்டுபொருள்கள் குதிரைக் கொட்டிலின் கொத்து வேலைக்குப் பயன்படலாம். குதிரைக் கொட்டில்கள் ஓரிரு விலங்குகளை அடைக்கும் சிறிய வீட்டுக் கட்டிடம் முதல் வேளாண் கண்காட்சி அல்லது குதிரைப் பந்தயக் களம் போன்ற பல நூறு விலங்குகளை அடைக்கும் பெரிய கட்டிடங்கள் வரை அளவில் வேறுபடுகின்றன.

வரலாறு[தொகு]

குதிரைக் கொட்டில் வரலாற்றியலாக பண்ணைகளில் உருவாகிய இரண்டாம் வகைக் கட்டிடமாகும் உலகின் மிகப் பழைய குதிரைக் கொட்டில்கள் பண்டைய எகிப்தில் பை-இரமேசெசு எனும் தொல்நகரிலும் குவந்திரிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரமேசெசுவில் கிமு 1304- கிமு1237 கால இடைவெளியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 182,986 ச.அடி பரப்பளவு கொண்டவை. இவை நீர் வடிய சரிவான தரையுடன் 480 குதிரைகளைக் அடைக்கும் அளவுக்குப் பெரியனவாக அமைந்து இருந்தன. [2]

தனிக் குதிரைக் கொட்டில் 16 ஆம் நூற்றாண்டு முதலே கட்டப்பட்டுள்ளது. இவை வீட்டுக்கு அருகில் நல்லமுறையில் கட்டப்பட்டன. ஏனெனில், விலங்குகள் அக்காலத்தில் பெரிதும் பேணிப் போற்றப்பட்டன. இது பொருளியலாக பயன் தந்ததோடு அவர்களுக்கு சமூக மதிப்பையும் வழங்கின. 19 ஆம் நூற்றாண்டு இடையில் மேலாளர்களைக் கொண்டு கவனித்த தீவனக் கொட்டிகள் அமைந்த பல குதிரைகளைக் கட்டிவைத்த குதிரைக் கொட்டில்கள் அமைந்து இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.[3][4]

பெரும்பிரித்தானியாவில் மரபாக மேல்தளத்தில் தீவனக் கிடங்கும் அமைந்திருந்துள்ளன. கொட்டிலின் முகப்பில் சுழல் கதவொன்று இருந்துள்ளது. கதவுகளும் சாளரங்களும் சீரொருமையோடு அமைக்கபட்டிருந்துள்ளன. கொட்டிலின் உட்பகுதிகள் பல கொட்டகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்துள்ளன. இவற்றில் குதிரை இனப்பெருக்கத்துக்காகவும் குட்டிகளுக்காகவும் நோயுற்ற குதிரைகளுக்காகவும் தனித்தனியாகப் பெரிய அறைகளும் அமைந்திருந்துள்ளன. தரைகள் கல்லடுக்காலும் பிறகு செங்கல்லடுக்காலும் நீர் வடிதாரைகளோடும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கொட்டிலுக்கு வெளியே முதல் தளத்தில் குதிரைகளைப் பேணியவர்கள் வாழ்ந்துள்ளனர்.[5][தெளிவுபடுத்துக]

குதிரைகள்[தொகு]

குதிரைக் கொட்டில் எப்போதும் பயற்சியாளர், நோட்டமிடுபவர், பேணுநர் வாழும் பெரிய வளாகத்தில் அமைந்திருக்கும்.

பிற பயன்கள்[தொகு]

"Stable" எனும் ஆங்கிலச் சொல் ஒருவரால் பயிற்றப்பட்ட விளையட்டு வீரர் குழுவையும் கலயரங்கின் கலைஞர் குழுவையும் குறிக்கும்.

வரலாற்றியலாக இந்த ஆங்கிலச் சொல் குதிரைப்படை வீரர் குழுவையும் குறிக்கும்.

காட்சிமேடை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Allen G. Noble, Traditional Buildings: A Global Survey of Structural Forms and Cultural Functions (New York: Tauris, 2007), 30.
  2. "Oldest horse stables". Guinness World Records. பார்க்கப்பட்ட நாள் 2016-06-27.
  3. England, Historic. "Historic Environment Local Management Training Programme - Historic England". www.helm.org.uk. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
  4. The Conversion of Traditional Farm Buildings: A guide to good practice (English Heritage publication).
  5. "The Barn Guide by South Hams District Council". southhams.gov.uk. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைக்_கொட்டில்&oldid=3003380" இலிருந்து மீள்விக்கப்பட்டது