குண்டல்ப்
குண்டல்ப் (Gundulf) என்பவர் நோர்மன் துறவியும், ஆலயங்கள் மற்றும் கோட்டைகள் கட்டும் கட்டடக்கலை வல்லுனரும் ஆவார். இவர் பிரான்சு நாட்டின் ரூவான் நகரின் அருகில் கி.பி. 1024 இல் பிறந்தார். ரூவானுக்கு அருகில் உள்ள ஒரு ஆலயத்தில் எழுத்தராக பணியாற்றிய இவர், எருசலேம் புனிதப் பயணம் முடித்து திரும்பும் போது ஏற்பட்ட புயலின் போது உயிர் பிழைத்தால் ஒரு துறவியாக மாறுவதாக உறுதிபூண்டார். நார்மாண்டியில் உள்ள பெக் மடாலயத்தின் துறவறத் தலைவர் லான்பிரான்க்கின் உடனான நட்பால், அவர் மூலம் இங்கிலாந்து அழைத்து வரப்பட்டார். லான்பிரான்க் கேன்டர்பரியின் பேராயராகப் பணியாற்றிய காலத்தில், அவருடன் இணைந்துப் பேராலயக் கட்டிடங்களை நிர்வகிக்கும் உக்கிராணக்காரனாகப் பணியாற்றினார். இங்கு பணியாற்றும் போது, இலண்டனின் புகழ்பெற்ற இலண்டன் கோபுரத்தை வடிவமைத்தார்.
கி.பி. 1077 இல், உரோச்சட்டர் தேவாலயத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.[1] சுமார் 30 வருடங்களாக உரோச்சட்டரிலேயே தங்கியிருந்த இவர், தனது 84 வது அகவையில் மரணமடைந்த பின், உரோச்சட்டர் தேவாலயத்திலேயே புதைக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fryde, et al. Handbook of British Chronology p. 266
- ↑ Hibbert, Christopher (1971). Tower of London. New York: Newsweek. p. 19-20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88225-002-1.